(ஜனவரி, 2025 இல் ‘சமஷ்டி அரசியல் முறைமைகள் : ஓர் அறிமுகம்’ எனும் நூல் ‘எழுநா’ வெளியீடாக வரவுள்ளது. அந் நூலிற்கான முன்னுரை இங்கே தரப்படுகிறது.) இத்தொகுப்பில் 10 கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இக்கட்டுரைகள் ‘எழுநா’ இணைய இதழில் 2022 – 24 காலத்தில் தொடராக வெளியிடப்பட்டவை. அரசியல் யாப்புச் சட்டம், அரசியல் கோட்பாடு, உலகின் தேசிய இனங்களின் பிரச்சினைகள், முரண்பாடுகளை இணக்கமான முறையில் தீர்வு செய்தல் ஆகிய துறைகளின் புலமையாளர்களும், […]
மானிடவியலாளர் பேரின்பநாயகத்தின் கட்டுரை ‘CASTE, RELIGION AND RITUAL IN CEYLON’ என்ற தலைப்பில் றொபர்ட் சித்தார்த்தன் பேரின்பநாயகம் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் ‘யாழ்ப்பாணத்தில் சாதி, சமயம், சடங்கு’ என்னும் தலைப்பில் இந்நூலில் இடம்பெறுகிறது. இக் கட்டுரையினை பேரின்பநாயகம் 1965 ஆம் ஆண்டில் எழுதினார். ஏறக்குறைய 60 ஆண்டுகள் கடந்தபின் இக்கட்டுரை தமிழாக்கம் மூலமாக தமிழ் அறிவுலகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணச் சமூகம் பற்றி ‘THE KARMIC […]
பஸ்தியாம்பிள்ளை அவர்களின் ஆய்வுக் கட்டுரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியக் காலனிய அரசின் கொள்கைகளும் நடைமுறைகளும் சாதி உறவுகள் தொடர்பாக எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தின என்பதை ஆராய்வதாக பேராசிரியர் பஸ்தியாம்பிள்ளை அவர்களின் கட்டுரை அமைந்துள்ளது. 19 ஆம் நூற்றண்டின் நடுப்பகுதி என்ற குறுகிய கால எல்லையை தமது ஆய்வுக்கான காலமாக வகுத்துக் கொண்ட பேராசிரியர் தமது கட்டுரையின் தலைப்பைப் பின்வருமாறு குறித்துள்ளார்: ‘CASTE IN NORTHERN SRI LANKA AND […]
(‘எழுநா’ பதிப்பகத்தின் பிரசுரமாக 2024 – நவம்பர் மாதம் வெளிவரவிருக்கும் கந்தையா சண்முகலிங்கம் அவர்களின் ‘யாழ்ப்பாணத்துச் சாதியம்’ என்னும் மொழிபெயர்ப்பு நூலின் அறிமுகமாக அமையும் கட்டுரை இங்கே தரப்பட்டுள்ளது.) இந்நூலில் 9 ஆய்வுக் கட்டுரைகளின் தமிழாக்கம் இடம்பெறுகிறது. இக்கட்டுரைகள் யாழ்ப்பாணத்தின் சாதிக் கட்டமைப்பினையும் சமூக உறவுகளையும் பன்முக நோக்கில் ஆராய்வனவாக உள்ளன. இவை யாவும் போருக்கு முந்திய கால யாழ்ப்பாணத்தின் சமூகம், பண்பாடு, பொருளாதாரம் அரசியல் என்பன பற்றிய நுண்ணாய்வுகளாக […]
ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின ஒற்றையாட்சி அரசு (Unitary State), ‘நேஷன் ஸ்டேட்’ (Nation State) என்பன நவீன அரசியல் கோட்பாடுகள் சார்ந்த அரசறிவியல்துறை எண்ணக்கருக்கள் (Concepts) என்பதையும், நவீனத்துக்கு முந்தியகால அரசுகளை ஒற்றையாட்சி முறையில் அமைந்த நேஷன் ஸ்டேட்ஸ் (Nation State) என விளக்கம் கூறுவது வரலாற்றுத் திரிபு என்பதையும் பேராசிரியர் செனிவிரத்தின விளக்கிக் கூறியிருப்பதை இக்கட்டுரையின் முதலாம் பகுதியில் எடுத்துக் கூறினோம். 2500 ஆண்டுகளுக்கு மேலாக […]
ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனம் (ICES) கொழும்பு, 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இனத்துவக் கற்கைகள் (Ethnic Studies) என்ற ஆய்வுத்துறை உலக அளவில் பிரபலம் பெற்று வந்த காலத்தில் இலங்கையில் நிறுவப்பட்ட இந்த ஆய்வு நிறுவனம், தனது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக 2002 ஆம் ஆண்டு இனத்துவமும், இனத்துவ அடையாளமும் முரண்பாடுகளும் (Ethnicity, Identity and Conflict) என்ற விடயப் […]
ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் வெலிவிற்ற கிராமத்தில் சமூக நிலைமாற்றம் (Social Transformation) நிகழ்ந்தது. அந்நிலை மாற்றம் கண்டிப் பிராந்தியம் முழுமைக்கும் பொதுவானதாக இருந்தது என ரியுடர் சில்வா அவர்கள் குறிப்பிடுகிறார். இச்சமூக நிலைமாற்றம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு, கருத்தியல் என அனைத்துக் கூறுகளையும் தழுவியதாக இருந்ததெனவும் அவர் கூறுகின்றார். வெலிவிற்றவின் பொருளாதார நிலைமாற்றத்தை எடுத்துக் கொண்டால் அது: அ) வெலிவிற்றவின் […]
ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா ஜோரஜ்.ஈ.டி. சில்வாவின் எழுச்சி கண்டிப் பிராந்தியத்தின் அரசியலில் ஜோர்ஜ்.ஈ.டி. சில்வாவின் பிரவேசம் பற்றிக் குறிப்பிட்டோம். இப்பகுதியில் அவரின் எழுச்சியைப் பற்றி பேராசிரியர் ரியுடர் சில்வா அவர்கள் கூறியிருப்பனவற்றைத் தழுவி விளக்கிக் கூறுவோம். ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா (1879-1951) 1879 ஆம் ஆண்டு பிறந்தவர். 1951 ஆம் ஆண்டில் அவர் காலமானார். 1931-1947 காலத்தில் டொனமூர் அரசியல் யாப்பின் படி அமைக்கப்பட்ட சட்ட […]
ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா ஆய்வு வினாவும் ஆய்வுப் புதிரும் “கண்டியின் சிங்களச் சமூகத்தில் சாதிக்கும் ஜனநாயகப்படுத்தலுக்கும் (Caste and Democratisation) இடையிலான உறவை ஆராய்வதே இக்கட்டுரையில் நான் ஆராயவிருக்கும் பிரதான ஆய்வுப் பிரச்சினையாகும் (The Key Research Question – பக். 450)” மேற்கூறியவாறு தாம் ஆராயவிருக்கும் ஆய்வுப் பிரச்சினை யாது என்பதைப் பேராசிரியர் தனது ஆய்வுக் கட்டுரையின் முற்பகுதியில் தெரிவிக்கின்றார். இவ்வாறு தமது […]
ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா இலங்கையில் சாதிக்கும் ஜனநாயக அரசியலுக்கும் (Caste and Democratic Politics) இடையிலான உறவைக் குறித்து ஆய்வு ஒன்றினைப் பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா அவர்கள் எழுதியுள்ளார். ‘CASTE DEMOCRACY AND POST INDEPENDENCE SOCIAL TRANSFORMATION IN A KANDYAN VILLAGE – 2023’ என்னும் தலைப்பில் அவரது ஆய்வுக்கட்டுரை அமைந்தது. அதனை மேற்குறித்தவாறு தமிழில் தந்துள்ளேன். இவ்வாய்வுக்காக ரியுடர் […]