கந்தையா சண்முகலிங்கம், Author at Ezhuna | எழுநா - Page 3 of 12
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கந்தையா சண்முகலிங்கம்

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் இனத்துவ அரசியலும் ஜனநாயகச் செயல்முறையும் – பகுதி 1

19 நிமிட வாசிப்பு | 18473 பார்வைகள்

ஆங்கில மூலம் : நவரட்ண பண்டார பேராசிரியர் A.M நவரட்ண பண்டார அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையின் மூத்த பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் 1990 கள் முதல் இன்றுவரை இலங்கையில் இன ஐக்கியம், சமூகநீதி, ஜனநாயகம் என்பவற்றுக்காக தமது புலமைத்துறை ஆய்வுகள் மூலம் பங்களிப்புச் செய்து வருபவர். ‘Ethnic Politics and the Democratic Process in Post – Independence Sri Lanka’ என்னும் […]

மேலும் பார்க்க

சமஷ்டி முறைகளை ஒப்பிடுதல் – பகுதி 3

16 நிமிட வாசிப்பு | 6721 பார்வைகள்

ஆங்கில மூலம்  : றொனால்ட்.எல். வாட்ஸ் மலேசியா றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் நூலில் ஒப்பீட்டு ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான மலேசியா பற்றி அடுத்து நோக்குவோம். மலேசியாவின் சமஷ்டி பற்றி இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் துறைப் பேராசிரியர் M.O.A. டி சில்வா அவர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். அவரது கட்டுரை ‘Power Sharing the International Experience’ என்னும் நூலில் (2011) […]

மேலும் பார்க்க

பாராளுமன்ற அரசாங்க முறையும் ஜனாதிபதி அரசாங்க முறையும் – பகுதி 2

10 நிமிட வாசிப்பு | 11505 பார்வைகள்

ஆங்கில மூலம் : V.K. நாணயக்கார 4. பாதி – ஜனாதிபதிமுறை அரசாங்கமுறை பாராளுமன்றமுறை, ஜனாதிபதிமுறை என்ற வகைப்பாட்டுக்குள் அடங்கக்கூடிய இருவகை அரசாங்க முறைகள் பற்றி மேலே விபரித்தோம். பாராளுமன்ற முறையென்றோ அல்லது ஜனாதிபதி முறையென்றோ தெளிவாக அடையாளம் காண முடியாத அரசாங்க முறைகைளைக் கலப்பு முறை (Hybrid System) எனச் சில ஆய்வாளர்கள் அழைத்தனர். Duverges என்ற பிரஞ்சு தேசத்து அறிஞர் முதலில் ‘பாதி – ஜனாதிபதி அரசாங்க […]

மேலும் பார்க்க

சமஷ்டி அரசியல் முறைகளை ஒப்பிடுதல் – பகுதி 2

14 நிமிட வாசிப்பு | 7410 பார்வைகள்

ஆங்கில மூலம் : றொனால்ட்.எல். வாட்ஸ் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளான கனடா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் சிறப்புக் கூறுகளை இக்கட்டுரையின் முற்பகுதியில் எடுத்துக் கூறினோம். அடுத்து, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளாகவும் பன்மொழிச் சமூகங்களாகவும் அமையும் இந்தியா, மலேசியா ஆகிய இரு நாடுகளின் சமஷ்டி முறைகளின் சிறப்புக் கூறுகளை நோக்குவோம். இந்தியா இந்தியாவின் சமஷ்டி பற்றிய எமது ஒப்பீடு பன்மொழி (சிங்களம், தமிழ், ஆங்கிலம்), பல்சமய (பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம்), […]

மேலும் பார்க்க

பாராளுமன்ற அரசாங்க முறையும் ஜனாதிபதி அரசாங்க முறையும் – பகுதி 1

11 நிமிட வாசிப்பு | 13065 பார்வைகள்

ஆங்கில மூலம் : V.K. நாணயக்கார அரசறிவியல் கலைக்களஞ்சியம் என்னும் இப்புதிய தொடரின் முதலாவது கட்டுரையாக பாராளுமன்ற அரசாங்க முறையும் ஜனாதிபதி அரசாங்க முறையும் என்னும் இக்கட்டுரை அமைகிறது. இவ்விரு அரசு முறைகளையும் ஒப்பீட்டு முறையில் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் 7 திறவுச் சொற்களுக்கான (Key Words) விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இத்திறவுச் சொற்களின் தேர்வுக்கு V.K. நாணயக்கார அவர்கள் எழுதிய ‘In Search of a New […]

மேலும் பார்க்க

சமஷ்டி முறைகளை ஒப்பிடுதல் – பகுதி 1

10 நிமிட வாசிப்பு | 7943 பார்வைகள்

ஆங்கில மூலம் : றொனால்ட்.எல். வாட்ஸ் றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்கள் எழுதிய ‘Comparing Federal Systems’ என்னும் நூல் 12 நாடுகளின் சமஷ்டி முறைகளை ஒப்பிட்டு ஆராயும் நூலாகும். இந்நூலை கனடாவின் ‘Queen’s University’ வெளியிட்டுள்ளது. இந்நூலின் 2 ஆவது அத்தியாயம் ஒப்பீட்டு ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சமஷ்டி முறைகளின் சிறப்புக் கூறுகளை ஒப்பீட்டு முறையில் தொகுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இவ்வத்தியாயத்தில் றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்கள் கூறியிருக்கும் கருத்துகளைத் […]

மேலும் பார்க்க

இடதுசாரி நோக்கில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறை பற்றிய விமர்சனம் – பகுதி 3

14 நிமிட வாசிப்பு | 8957 பார்வைகள்

ஆங்கில மூலம்   : ஜயம்பதி விக்கிரமரட்ண ஐக்கிய அமெரிக்காவும் பிரான்சும் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதிமுறை 200 ஆண்டுகால வரலாற்றை உடையது. சட்ட ஆக்கத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்பனவற்றிற்கிடையிலான அதிகாரப்பிரிப்பு (Seperation of Power), பலமான இரு கட்சிமுறையின் வளர்ச்சி, கட்டுப்படுத்தல்களும் சமப்படுத்தல்களும் (Checks and Balances) என்னும் தத்துவத்தின் செயற்பாடு என்பன அந்நாட்டின் அரசியல் முறையின் ஸ்திரத்தன்மைக்கு காரணமாக அமைந்தன. ஆயினும் அந்நாட்டின் ஜனாதிபதி முறையினை மாதிரியாகக் கொண்ட […]

மேலும் பார்க்க

இடதுசாரி நோக்கில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறை பற்றிய விமர்சனம் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு | 7306 பார்வைகள்

ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ண இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதிமுறை அறிமுகம் செய்யப்பட்டு 46 ஆண்டுகள் கடந்து விட்டன. இந் நீண்டகால எல்லையுள் இம்முறையின் கீழ் நடந்தேறிய அனைத்து ஜனநாயக விரோதச் (Un – Democratic) செயற்பாடுகளையும் மூன்று கருத்தியல்களின் (Ideologies) துணையுடன் புரிந்து கொள்ள முடியும் எனக் கருதுகின்றோம். முதலாவதான பெரும்பான்மைவாதம் இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஒடுக்கு முறைக்கான அரசியல் நிறுவனங்களை (Political Institutions) கட்டமைத்து அவற்றைப் […]

மேலும் பார்க்க

­இடதுசாரி நோக்கில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறை பற்றிய விமர்சனம் – பகுதி 1

13 நிமிட வாசிப்பு | 9048 பார்வைகள்

ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ண 2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கையின் நிறைவேற்று அதிகார முறையை ஒழித்தல் என்னும் விடயம் முக்கிய பேசுபொருளாக ஆகியுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள், இம் முறையை நீக்கி பாராளுமன்ற முறைக்கு (Parliamentary System) மீண்டும் திரும்புவதற்கான சாதக நிலையை உருவாக்கலாம் என நம்பப்படுகின்றது. இப் பின்புலத்தில் நிறைவேற்று ஜனாதிபதிமுறை பற்றிய விமர்சன நோக்கிலான ஆய்வுகளைத் தமிழ் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் […]

மேலும் பார்க்க

சமஷ்டிகளும் சமஷ்டி அரசியல் முறைகளும்

9 நிமிட வாசிப்பு | 10972 பார்வைகள்

ஆங்கில மூலம் : றொனால்ட்.எல். வாட்ஸ் ‘சமஷ்டி அரசியல் முறைகளை ஒப்பீடு செய்தல்’ (COMPARING FEDERAL SYSTEMS) என்னும் ஆய்வு நூலினை றொனால்ட் எல். வாட்ஸ் என்னும் அறிஞர் எழுதியுள்ளார். இந்நூலினைக் கனடாவின் ‘Queen’s University’ வெளியிட்டது. இதன் முதற்பதிப்பு 1997 இலும் இரண்டாம் பதிப்பு 1999 ஆம் ஆண்டிலும் வெளியாயின. இந்நூலில் 6 முதல் 14 வரையுள்ள பக்கங்களில் ‘சமஷ்டி குறித்த சொற்களின் வரைவிலக்கணங்களும் சமஷ்டித் தத்துவங்களும்’ (DEFINITION […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்