நூல் அறிமுகம் பெண்களின் வன்முறைத் தெரிவு, அதற்கான அக-புற நிர்ப்பந்தங்கள், கள அனுபவங்கள், போருக்குப் பின் பெண்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சமூக நெருக்கடிகளை இந்நூல் அனுபவரீதியாகவும் உரையாடல்கள் கதையாடல்கள் வழியாகவும் முன்வைக்கின்றது. இதில் பேசப்படும் அனுபவங்களும் கதையாடல்களும் தகவல்களும் பெரும்பான்மையாக நிலவும் கட்டமைக்கப்பட்ட பார்வைகளைக் கட்டுடைக்கவும் புரிதலை வளர்த்துக்கொள்ளவும் உந்தக்கூடியது. உலகளாவிய பெண் போராளிகளின் அரசியல் வகிபாகத்தினை பெண்ணிய மற்றும் சமூக, பண்பாட்டு, அரசியல் நோக்கு நிலைகளில் விளங்கிக்கொள்ளவும் உதவக்கூடியது. […]