உதவி : ஜீவராசா டிலக்ஷனா இலங்கையில் ஒரு பொதுவான நிர்வாக முறையையும், சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியையும், தாராண்மை ஜனநாயக அரசாங்க முறையையும் நிலைநிறுத்துவதற்காக கோல்புறூக்கமரன் குழுவினர் 1829 ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி இலங்கை வந்தனர். இவர்களில் கோல்புறூக் குழுவினர் அரசியல் சீர்திருத்தத்தையும், கமரன் குழுவினர் நீதிச் சீர்திருத்தத்தையும் சிபாரிசு செய்தனர். 1831 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி கோல்புறூக் குழுவினர் தமது அறிக்கையைச் சமர்ப்பித்தனர். தமது […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடலும் மேலெழுந்திருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு – கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்ற கருத்தை தனது முதலாவது கொள்கை விளக்க உரையில் கூறியிருக்கின்றார். தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவேண்டுமென்றால் அரசியல் ஸ்திரநிலையைக் கொண்டுவரவேண்டும். இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் அரசியல் ஸ்திர நிலையையும் உருவாக்க முடியாது. பிராந்திய வல்லரசான இந்தியா 13 ஆவது திருத்தத்தையே […]