Articles - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

இலங்கையில் பஷ்தூன்கள்: வரலாறு, சமூகப் பங்களிப்பு, பண்பாட்டு மரபு

17 நிமிட வாசிப்பு

அறிமுகம் இலங்கை பல இனங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் பண்பாடுகள் ஒன்றிணைந்து விளங்கும் ஒரு பன்முகத் தீவாகும். அதன் வரலாறு சிங்களர், தமிழர், இலங்கை முஸ்லிம்கள், மலாயர், பறங்கியர், செட்டியார், இந்திய வம்சாவளித் தமிழர் போன்ற சமூகங்களுடன் மட்டுமல்லாமல், எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்தாலும் குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சுவடுகளை விட்டுச் சென்ற பிற குடியேற்றக் குழுக்களுடனும் இணைந்துள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒரு சமூகமாக பஷ்தூன்கள் அல்லது ஆப்கானியர்கள் காணப்படுகின்றனர். இலங்கையில் […]

மேலும் பார்க்க

மலையகக் கலைகளில் இராமநாடகம்

27 நிமிட வாசிப்பு

மலையகம் இலங்கையின் நடுப்பகுதியில் அமைந்த பகுதியாகும். இந்தியாவிலிருந்து தொழில் நிமித்தம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்களே மலையகத்தவராவர். இவர்கள் இந்நாட்டில் மத்திய மலைப்பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.¹ மலையக மக்கள் அதிகளவிலான தெய்வ நம்பிக்கை கொண்டோராகவும் இருந்தனர். இந்தியாவிலிருந்து வந்த ஆரம்ப காலத்தில் இம்மக்கள் பெரும்பாலும் படிப்பறிவு அற்றவர்களாய் இருந்தமையால் பாரியளவில் நாட்டாரியல் சார்ந்த மரபுகளின் மீது மாத்திரமே நம்பிக்கை கொண்டிருந்தனர். மலையகத்தாரில் அதிகமானோர் இந்துக்களாகக் காணப்பட்டனர். எனவே இவர்கள் இந்துச் சடங்கு சம்பிரதாயங்களில் […]

மேலும் பார்க்க

பெருந்தோட்ட உற்பத்திமுறைமையின் உதயமும் புதிய கடவுளர் உருவாக்கமும்: தேயிலைத் தொழில்துறைசார் தெய்வங்களை முன்வைத்து

21 நிமிட வாசிப்பு

அறிமுகம் ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுமத்தின் கடவுளர்களினதும் வழிபாட்டு முறைகளினதும் மேற்கிளம்புகையில் அக்குழுமத்தின் பௌதீகச் சூழல், உற்பத்தி முறை, உற்பத்தி உறவு ஆகியனவும் அவற்றினால் கட்டியெழுப்பப்படும் வாழ்க்கை முறையும் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளன. அவ்வாறு உருவாக்கம்பெறும் வழிபாட்டு மரபானது அக – புறக் காரணிகளால் அச்சமூகத்துள் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைப்பு அடைகிறது. அதேவேளை, அச்சமூகம் அக்குறிப்பிட்ட பௌதீகச் சூழலைவிட்டு வெளியேறிய பின்பும் அவ்வழிபாட்டு மரபு அவர்களிடத்துத் தொடர்வதுடன் புதிதாக முகங்கொள்ளும் […]

மேலும் பார்க்க

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவணை மேய்ச்சல் தரை: நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் – பகுதி 2

36 நிமிட வாசிப்பு

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும், மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய மோதல்களின் மூல காரணியாக நிலப் பற்றாக்குறை காணப்படுகிறது. நிலத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும் போது, கால்நடை விவசாயிகளுக்கும் பயிர்ச் செய்கையாளர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் […]

மேலும் பார்க்க

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவணை மேய்ச்சல் தரை: நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் – பகுதி 1

27 நிமிட வாசிப்பு

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும், மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய மோதல்களின் மூல காரணியாக நிலப் பற்றாக்குறை காணப்படுகிறது. நிலத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும் போது, கால்நடை விவசாயிகளுக்கும் பயிர்ச் செய்கையாளர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் […]

மேலும் பார்க்க

மலையகத் தமிழர் பண்பாட்டுத் தேசியம்: கோட்பாடும் நடைமுறையும் ஒரு பரிசீலனை – பகுதி 2

29 நிமிட வாசிப்பு

மலையகத்தின் கூத்துக் கலைகள் பொன்னர் – சங்கர்  மலையகத் தமிழர்களிடையே மட்டுமே நிகழ்த்தப்படும் ‘பொன்னர் – சங்கர்’ கூத்தின் மையக் கருவாக, குண்ணுடையான், தாமரை நாச்சி ஆகியோரின் மரணமும், அவரது குழந்தைகளான பொன்னர், சங்கர், தங்காள் ஆகியோரின் சோகமும் துயரமும் அமைந்துள்ளன. இக்கூத்து, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட தோட்டங்களிலும், குறிப்பாக நோர்வூட், போற்றி, சீனக்கொல்லை, வீரட் தோட்டங்கள், மஸ்கெலிய, காட்மோர், அரசித் தோட்டம், புளூம்பில்ட், […]

மேலும் பார்க்க

மலையகத் தமிழர் பண்பாட்டுத் தேசியம்: கோட்பாடும் நடைமுறையும் ஒரு பரிசீலனை – பகுதி 1

30 நிமிட வாசிப்பு

அறிமுகம் இலங்கை மலையகத் தமிழர்கள் என்பவர்கள் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான சுமார் 125 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில், தென்னிந்தியக் கிராமங்களில் இருந்து பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, தென் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் மேல் மாகாணம் ஆகிய பகுதிகளில் குடியேற்றப்பட்ட தொழிலாளர்களின் ஆறு முதல் எட்டு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களாவர். 18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர் […]

மேலும் பார்க்க

நீர்வளப் பாதுகாப்பும் நிலவள மேம்பாடும்: உணவுத் தன்னிறைவின் அடித்தளங்கள்

29 நிமிட வாசிப்பு

உலகில் உள்ள ஜீவராசிகளின் உயிர்வாழ்வுக்கு நீர் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். உலகிலே மொத்தமாக 1400 மில்லியன் கனகிலோமீற்றர் நீர் உள்ளது. உலகச் சமநிலையில் இதன் அளவைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது (ஆனால் இதன் இருப்பின் விகிதத்தையே மாற்ற முடியும்). பூமியில் உள்ள மொத்த நீரில், 97.4% ஆனது உப்பு நீராகும். எஞ்சிய 2.6% மட்டுமே நன்னீர் ஆகும். இந்த 2.6% நன்னீரில், சுமார் 2% ஆனது பனிக்கட்டியாகத் துருவங்களிலும் […]

மேலும் பார்க்க

மலையகத் தமிழர் சமூக உருவாக்கத்தில் அரங்கின் பாத்திரம்

37 நிமிட வாசிப்பு

இலங்கையின் மலையகத் தமிழரின் வரலாறும் பண்பாடும் பெருந்தோட்ட உற்பத்தி உறவுகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதை நாம் அறிவோம். பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியின் சாபக்கேடுகளில் ஒன்றாக நிகழ்ந்த மாபெரும் புலப்பெயர்வுகளில் மலையகத் தமிழரின் புலம்பெயர்வும் உள்ளடங்கியுள்ளது. அது மனிதகுல வரலாற்றில் ஒரு நெடும் பயணம் (Long Walk) என அவுஸ்திரேலிய நாட்டவரான வென்டன் ட்ரைசன் என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது தி லோங் வோக்’ (The Long Walk) என்ற […]

மேலும் பார்க்க

மன்னார் தீவில் கனிம மணல் அகழ்வு: சமூக, அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல் பாதிப்புகள் – பகுதி 2

30 நிமிட வாசிப்பு

போருக்கு முன்பும் போரின்போதும் நிகழ்ந்த மக்கள் போராட்டங்களிலிருந்து மாறுபடும் வகையில், இக்காலத்தில் மக்கள் இயக்கம் புதிய வடிவம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கோடுகளைத் தாண்டி, அடிப்படை வாழ்வாதாரமான மண்ணின் மீதும் அதன் வளத்தின் மீதுமான பற்றையும் திடமான பிடிப்பையும் இந்த நிலையின் தோற்றத்திற்கான காரணியாகக் காணலாம். இந்தப் போராட்டங்கள் வாழ்வாதாரங்களைத் தக்கவைக்க உருவாகியுள்ளன. அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலுள்ள, மன்னார் தீவில் நடைபெறும் கனிம மணல் அகழ்வுக்கெதிரான தொடர்ச்சியான மக்கள் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்