மன்னார் தீவில் கனிம மணல் அகழ்வு: சமூக, அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல் பாதிப்புகள் – பகுதி 1
35 நிமிட வாசிப்பு
போருக்கு முன்பும் போரின்போதும் நிகழ்ந்த மக்கள் போராட்டங்களிலிருந்து மாறுபடும் வகையில், இக்காலத்தில் மக்கள் இயக்கம் புதிய வடிவம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கோடுகளைத் தாண்டி, அடிப்படை வாழ்வாதாரமான மண்ணின் மீதும் அதன் வளத்தின் மீதுமான பற்றையும் திடமான பிடிப்பையும் இந்த நிலையின் தோற்றத்திற்கான காரணியாகக் காணலாம். இந்தப் போராட்டங்கள் வாழ்வாதாரங்களைத் தக்கவைக்க உருவாகியுள்ளன. அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலுள்ள, மன்னார் தீவில் நடைபெறும் கனிம மணல் அகழ்வுக்கெதிரான தொடர்ச்சியான மக்கள் […]
மேலும் பார்க்க
மலையகத்தின் போராட்ட எழுச்சியும் தியாகிகளின் வரலாற்று எழுதுகையும்: மாத்தளை ரோகிணியின் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் நூலை முன்வைத்து
20 நிமிட வாசிப்பு
ஒரு சமூகத்தின் வரலாறு பற்றிய நோக்கு, அச்சமூகத்தினரிடையே தன்னம்பிக்கையையும் உறுதியையும் விதைக்க வேண்டும். அதிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும் சமூகமொன்றின் வரலாறானது, அச்சமூகத்தின் எழுச்சிக்கும் விடுதலைக்கும் வலுவூட்டும் வகையில் கட்டியெழுப்பப்பட வேண்டியது அவசியமாகும். ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த போராட்டங்கள், போராட்டக் களங்களைக் கண்டவர்களின் துணிவு, போராட்டங்களில் மடிந்தவர்களின் வீர வாழ்வு, போராட்டங்களால் அடைந்த வெற்றி முதலானவை பற்றிய செய்திகள் ஆதிக்கத் தகர்ப்புக்கான தூண்டலையும் வலுவையும் வழங்குகின்றன. அதனாலேயே ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த […]
மேலும் பார்க்க
பன்மைத் தேசங்களில் கண்ணகை: தாய்த் தெய்வ மரபில் கண்ணகையை மீள்வரையறை செய்தல்
30 நிமிட வாசிப்பு
தமிழ்ச் சமூகத்தின் தாய்த்தெய்வ மரபு மிக நீண்டது. அது சிந்துவெளி தொடங்கி, தமிழகம் ஊடாக, கிழக்கிலங்கை வரை விரிந்துள்ளது. இந்தக் கால இட நீள் மரபில் தமிழ்ச் சமூகம் கண்டுள்ள தாய்த்தெய்வங்கள் எவை? அவற்றின் இருத்தலியம் என்ன? படிமலர்ச்சி என்ன? பிற்காலப் பரிமாணங்கள் என்ன? இவற்றில் கண்ணகையின் வகிபாகம் என்ன? முதலான கருத்தினங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. தமிழர் தேவகணத்தில் கண்ணகை மிகவும் தனித்துவமானவள் என்பதும், அவளை வேறுவகையில் மீள்வரையறை செய்ய […]
மேலும் பார்க்க
நகராத தேர்: பனை அபிவிருத்தி சபை
15 நிமிட வாசிப்பு
இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் முக்கிய பொருளாதார வளம், பனை. இதன் முகாமைத்துவப் பொறுப்பை பனை அபிவிருத்தி சபையும் அதனுடன் இணைந்த பனை ஆராய்ச்சி நிறுவனமும் வகிக்கின்றன. பனை வடக்கு – கிழக்கின் இயற்கைத் தாயக வளமாகச் செறிவுடன் காணப்படுகிறது. அது வெறும் மரமல்ல, தமிழர் அடையாளத்துக்கும், வாழ்வாதாரத்துக்குமான பிரிக்கமுடியாத அங்கம். ஆனால், பனை அபிவிருத்தி சபை மத்திய அரசின் கீழ் செயற்படுவதால் வடக்கு – கிழக்கின் பொருளாதார […]
மேலும் பார்க்க
மலையகத்தில் முருக வழிபாடு
16 நிமிட வாசிப்பு
காலனித்துவ காலத்துக்கு முன்னரே வர்த்தக நடவடிக்கைகளோடு இலங்கை தேசத்தில் தென்னிந்தியத் தமிழர்கள் தொடர்புபட்டிருந்தார்கள். அவர்களில் நாட்டுக்கோட்டை நகரத்தார் என அழைக்கப்பட்ட செட்டிமார்களின் வர்த்தக நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கதாகும். செட்டிமார்களின் வரவு மலையக நகரங்களில் சத்திரங்கள் உருவாகுவதற்கு வழிகோலின. அச்சத்திரங்கள் பின்னாளில் முருகன் ஆலயங்களாக அமையப்பெற்றன. இந்திய வம்சாவளித் தமிழர்களின் வரவு இவ்வாறு அமையப்பெற்ற ஆலயங்களின் விருத்திக்குச் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கின எனலாம். வர்த்தக நோக்கம் கருதி வருகைதந்த செட்டிமார்கள் நகரங்களில் தாங்கள் […]
மேலும் பார்க்க
வடக்கு – கிழக்கு நிலத்தொடர் இணைப்பில், குச்சவெளிப் பிரதேச மக்களின் நில உரிமைக்கான போராட்டம்
15 நிமிட வாசிப்பு
தமிழ் பேசும் மக்களின் போராட்டங்கள் பல பரிமாணங்களைக் கொண்டவை. போருக்குப் பிறகான காலப்பகுதியில், நில உரிமைக்கான மக்கள் எழுச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. இப்போதைய நிலவரத்தில், வடக்கு மற்றும் கிழக்கில் நில உரிமைக்கான போராட்டங்கள் பல இடங்களில் வேரூன்றி வளர்ந்து வருகின்றன. இந்தப் போராட்டங்கள் பலவிதமான நெருக்கடிகளின் மத்தியில், மக்கள் திரளுடன் நடைபெறுகின்றன. குறிப்பாக, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் நில உரிமைப் போராட்டங்களுக்கு வழங்கப்படும் ஆதரவு மிக முக்கியமானதாக அமைகின்றது. […]
மேலும் பார்க்க
அஞ்சி முனியாண்டி வழிபாடும் படையல் முறைமையும்: மலையகத்தை முன்வைத்து
12 நிமிட வாசிப்பு
நாட்டுப்புறத் தெய்வங்களில் பல, கொலைகளில் உருவானதாகவே அமையப்பெற்றுள்ளன. மாடசாமி, மருதைவீரன், பொன்னர் – சங்கர் உள்ளிட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் மீதான அனுட்டிப்புகள் அவ்வகையில் அவதானத்திற்குரியவைகளாகும். அவ்வாறே பெண் தெய்வ வழிபாடு தொடர்பிலும் கொலையின் மூலமான தெய்வ அனுட்டிப்புகள் முக்கியத்துவத்திற்குரியதாக விளங்குகின்றன. முனி, கிராமத் தெய்வமாகவே உணரப்படுகின்ற நிலையில் இயக்கசக்தி மீதான கவனத்தைப் பெற்றுள்ளதாக அமைகிறது. பொதுவாகக் கிராமத் தெய்வங்களாக அடையாளப்படுத்தப்பட்ட தெய்வங்கள் உலகில் வாழ்ந்த தடயத்தைக் கொண்டுள்ளதோடு அவர்களது தியாகம், […]
மேலும் பார்க்க
இலங்கை மலையகத் தமிழர்களின் சமூக அசைவியக்கத்தில் கூத்துக் கலைகளின் செல்வாக்கு – பகுதி 2
15 நிமிட வாசிப்பு
இ) மலையக சமூக அசைவியக்கத்தில் அருச்சுனன் தபசு தமிழர் பண்பாட்டில் வழங்கப்பட்டுவரும் மகாபாரத இதிகாசத்தின் கிளைக்கதையான அருச்சுனன் தபசு, துரியோதனனிடம் சூதாட்டத்தில் நாடு, நகரங்களையும் அரசாட்சியையும் இழந்த பஞ்ச பாண்டவர்களான தருமன், வீமன், நகுலன், சகாதேவன், அருச்சுனன் ஆகியோர் வனவாசம் அனுப்பப்பட்ட பின்னர், தாம் இழந்த நகரங்களை மீளப் பெறுவதற்கு ‘பாசுபத ஆயுதம்’ பெற செல்லும் அருச்சுனனின் வனம் கடத்தல் காட்சிகளை மையப்படுத்தியதாக மலையகத்தில் நிகழ்த்தப்படுகின்றது. மோகினிவனம், இராட்சதன் வனம், […]
மேலும் பார்க்க
இலங்கை மலையகத் தமிழர்களின் சமூக அசைவியக்கத்தில் கூத்துக் கலைகளின் செல்வாக்கு – பகுதி 1
15 நிமிட வாசிப்பு
அறிமுகம் இலங்கை மலையகத்தமிழர்கள் எனப்படும் மக்கள் கூட்டம், 18 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் மத்தியபகுதி வரை பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் தமிழகக் கிராமங்களில் இருந்து அழைத்துவரப்பட்டு இலங்கையில் கொக்கோ, கோப்பி, சிங்கானா, தேயிலை, இறப்பர், தென்னை போன்ற செய்கைகளிலும்; துறைமுகம், நெசவாலை, வீதியமைப்பு போன்ற துறைகளிலும் ஈடுபடுத்தப்பட்ட தொகுதியினராவர். அவர்கள் 1924 முதல் 1945 வரையிலான காலப்பகுதியில், முதலில் கால்நடையாகவும் பின்னர் படகுகள், ரயில்கள் […]
மேலும் பார்க்க
இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுகளில் பிராமணரும் பிரம்மதேயமும்
14 நிமிட வாசிப்பு
இந்தியாவில் பொ.ஆ.மு. காலத்தில் மேலோங்கத் தொடங்கிய பிராமண மதம், கடல் கடந்து இலங்கை, கம்போடியா, தாய்லாந்து, பர்மா, ஜாவா, இந்தோனேசியா முதலான பல நாடுகளில் விரைவாகச் செல்வாக்குப் பெற்றது. அந்நாடுகளின் அரச சபைகளில் பிராமணர்க்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அரச மட்டத்திலான சடங்குகள், பிராமணர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச அதிகாரத்திற்கான சம்பிரதாயபூர்வமான அங்கீகாரத்தைப் பிராமணச் சடங்குகள் வழங்கியுள்ளன. பிராமணர் அரச ஆலோசகர்களாகவும் புரோகிதர்களாகவும் விளங்கியுள்ளனர். அரச மட்டத்தில் முதன்மைபெற்ற பிராமணச் சடங்குகள் […]
மேலும் பார்க்க