எம்.எம். ஜெயசீலன் Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

எம்.எம். ஜெயசீலன்

பெருந்தோட்ட உற்பத்திமுறைமையின் உதயமும் புதிய கடவுளர் உருவாக்கமும்: தேயிலைத் தொழில்துறைசார் தெய்வங்களை முன்வைத்து

21 நிமிட வாசிப்பு

அறிமுகம் ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுமத்தின் கடவுளர்களினதும் வழிபாட்டு முறைகளினதும் மேற்கிளம்புகையில் அக்குழுமத்தின் பௌதீகச் சூழல், உற்பத்தி முறை, உற்பத்தி உறவு ஆகியனவும் அவற்றினால் கட்டியெழுப்பப்படும் வாழ்க்கை முறையும் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளன. அவ்வாறு உருவாக்கம்பெறும் வழிபாட்டு மரபானது அக – புறக் காரணிகளால் அச்சமூகத்துள் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைப்பு அடைகிறது. அதேவேளை, அச்சமூகம் அக்குறிப்பிட்ட பௌதீகச் சூழலைவிட்டு வெளியேறிய பின்பும் அவ்வழிபாட்டு மரபு அவர்களிடத்துத் தொடர்வதுடன் புதிதாக முகங்கொள்ளும் […]

மேலும் பார்க்க

மலையகத்தின் போராட்ட எழுச்சியும் தியாகிகளின் வரலாற்று எழுதுகையும்: மாத்தளை ரோகிணியின் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் நூலை முன்வைத்து

20 நிமிட வாசிப்பு

ஒரு சமூகத்தின் வரலாறு பற்றிய நோக்கு, அச்சமூகத்தினரிடையே தன்னம்பிக்கையையும் உறுதியையும் விதைக்க வேண்டும். அதிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும் சமூகமொன்றின் வரலாறானது, அச்சமூகத்தின் எழுச்சிக்கும் விடுதலைக்கும் வலுவூட்டும் வகையில் கட்டியெழுப்பப்பட வேண்டியது அவசியமாகும். ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த போராட்டங்கள், போராட்டக் களங்களைக் கண்டவர்களின் துணிவு, போராட்டங்களில் மடிந்தவர்களின் வீர வாழ்வு, போராட்டங்களால் அடைந்த வெற்றி முதலானவை பற்றிய செய்திகள் ஆதிக்கத் தகர்ப்புக்கான தூண்டலையும் வலுவையும் வழங்குகின்றன. அதனாலேயே ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த […]

மேலும் பார்க்க

இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுகளில் பிராமணரும் பிரம்மதேயமும்

14 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பொ.ஆ.மு. காலத்தில் மேலோங்கத் தொடங்கிய பிராமண மதம், கடல் கடந்து இலங்கை, கம்போடியா, தாய்லாந்து, பர்மா, ஜாவா, இந்தோனேசியா முதலான பல நாடுகளில் விரைவாகச் செல்வாக்குப் பெற்றது. அந்நாடுகளின் அரச சபைகளில் பிராமணர்க்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அரச மட்டத்திலான சடங்குகள், பிராமணர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச அதிகாரத்திற்கான சம்பிரதாயபூர்வமான அங்கீகாரத்தைப் பிராமணச் சடங்குகள் வழங்கியுள்ளன. பிராமணர் அரச ஆலோசகர்களாகவும் புரோகிதர்களாகவும் விளங்கியுள்ளனர். அரச மட்டத்தில் முதன்மைபெற்ற பிராமணச் சடங்குகள் […]

மேலும் பார்க்க

பிராமி எழுத்து வடிவமும் தொடக்ககால எழுத்தறிவும்

23 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டினதும் இலங்கையினதும் எழுத்தறிவின் தொடக்கம் குறித்து ஆய்வாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இரு பிராந்தியங்களிலும் புழக்கத்தில் இருந்துள்ள காலத்தால் பழைய எழுத்தாகப் பிராமி கொள்ளப்படுகின்றது. இந்திய உபகண்டச் சூழலில் பெரும்பாலான மொழிகளின் வரிவடிவங்களுக்கான தாய் வடிவமாகப் பிராமி விளங்கியுள்ளது. தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளின் வரிவடிவங்கள் பிராமி எழுத்திலிருந்தே வளர்ச்சியடைந்துள்ளன. பிராமி எழுத்துகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே முதன்முதல் வாசித்தறியப்பட்டன. ஜேம்ஸ் பிரின்ஸப் 1837 ஆம் ஆண்டு அசோகரின் பாறைக் […]

மேலும் பார்க்க

தேசபக்தன் : தோட்டத் தொழிலாளரின் அரசியற் குரல்

23 நிமிட வாசிப்பு

மலையகத் தமிழர் வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தை முக்கியமான நிலைமாறுகட்ட காலமெனலாம். அக்காலத்திலேயே இலங்கைவாழ் இந்தியருக்கு முதன்முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு சீர்திருத்தத்தின்போது ஒரு நியமன உறுப்பினர் இந்தியர் சார்பாகத் தெரிவுசெய்யப்பட்டார். அதன்பின்னர் 1924 ஆம் ஆண்டு சீர்திருத்தத்தின் போது இந்தியர் சார்பாக இரண்டு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். அத்தேர்தலின் போது நடைமுறைக்கு வந்த மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை இலங்கைவாழ் இந்தியருக்கும் வழங்கப்பட்டது. […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்