மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குக் கோறளைப்பற்றுப் பிரதேச செயலக (வாகரை) எல்லைக்குள் உள்ள புச்சாக்கேணி கிராம அலுவலர் பிரிவின் மூன்றாம் கட்டை, நான்காம் கட்டை மற்றும் கல்லரிப்பு ஆகிய பகுதிகளில் 25.02.2025 அன்று சேனைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு எதிராக நடந்த எரிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள், வன வளப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு கிடைத்த பெரும் அவமானமாகும். இந்தச் செயற்பாட்டில் 13 குடிசைகள், குடும்பங்களின் உடைமைகள், உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், நெல், பயறு […]