Articles - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

வடக்கு – கிழக்கு நிலத்தொடர் இணைப்பில், குச்சவெளிப் பிரதேச மக்களின் நில உரிமைக்கான போராட்டம் 

15 நிமிட வாசிப்பு

தமிழ் பேசும் மக்களின் போராட்டங்கள் பல பரிமாணங்களைக் கொண்டவை. போருக்குப் பிறகான காலப்பகுதியில், நில உரிமைக்கான மக்கள் எழுச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. இப்போதைய நிலவரத்தில், வடக்கு மற்றும் கிழக்கில் நில உரிமைக்கான போராட்டங்கள் பல இடங்களில் வேரூன்றி வளர்ந்து வருகின்றன. இந்தப் போராட்டங்கள் பலவிதமான நெருக்கடிகளின் மத்தியில், மக்கள் திரளுடன் நடைபெறுகின்றன. குறிப்பாக, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் நில உரிமைப் போராட்டங்களுக்கு வழங்கப்படும் ஆதரவு மிக முக்கியமானதாக அமைகின்றது. […]

மேலும் பார்க்க

அஞ்சி முனியாண்டி வழிபாடும் படையல் முறைமையும்: மலையகத்தை முன்வைத்து

12 நிமிட வாசிப்பு

நாட்டுப்புறத் தெய்வங்களில் பல, கொலைகளில் உருவானதாகவே அமையப்பெற்றுள்ளன. மாடசாமி, மருதைவீரன், பொன்னர் – சங்கர் உள்ளிட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் மீதான அனுட்டிப்புகள் அவ்வகையில் அவதானத்திற்குரியவைகளாகும். அவ்வாறே பெண் தெய்வ வழிபாடு தொடர்பிலும் கொலையின் மூலமான தெய்வ அனுட்டிப்புகள் முக்கியத்துவத்திற்குரியதாக விளங்குகின்றன. முனி, கிராமத் தெய்வமாகவே உணரப்படுகின்ற நிலையில் இயக்கசக்தி மீதான கவனத்தைப் பெற்றுள்ளதாக அமைகிறது. பொதுவாகக் கிராமத் தெய்வங்களாக அடையாளப்படுத்தப்பட்ட தெய்வங்கள் உலகில் வாழ்ந்த தடயத்தைக் கொண்டுள்ளதோடு அவர்களது தியாகம், […]

மேலும் பார்க்க

இலங்கை மலையகத் தமிழர்களின் சமூக அசைவியக்கத்தில் கூத்துக் கலைகளின் செல்வாக்கு – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

இ) மலையக சமூக அசைவியக்கத்தில் அருச்சுனன் தபசு தமிழர் பண்பாட்டில் வழங்கப்பட்டுவரும் மகாபாரத இதிகாசத்தின் கிளைக்கதையான அருச்சுனன் தபசு, துரியோதனனிடம் சூதாட்டத்தில் நாடு, நகரங்களையும் அரசாட்சியையும் இழந்த பஞ்ச பாண்டவர்களான தருமன், வீமன், நகுலன், சகாதேவன், அருச்சுனன் ஆகியோர் வனவாசம் அனுப்பப்பட்ட பின்னர், தாம் இழந்த நகரங்களை மீளப் பெறுவதற்கு ‘பாசுபத ஆயுதம்’ பெற செல்லும் அருச்சுனனின் வனம் கடத்தல் காட்சிகளை மையப்படுத்தியதாக மலையகத்தில் நிகழ்த்தப்படுகின்றது. மோகினிவனம், இராட்சதன் வனம், […]

மேலும் பார்க்க

இலங்கை மலையகத் தமிழர்களின் சமூக அசைவியக்கத்தில் கூத்துக் கலைகளின் செல்வாக்கு – பகுதி 1

15 நிமிட வாசிப்பு

அறிமுகம் இலங்கை மலையகத்தமிழர்கள் எனப்படும் மக்கள் கூட்டம், 18 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் மத்தியபகுதி வரை பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் தமிழகக் கிராமங்களில் இருந்து அழைத்துவரப்பட்டு இலங்கையில் கொக்கோ, கோப்பி, சிங்கானா, தேயிலை, இறப்பர், தென்னை போன்ற செய்கைகளிலும்; துறைமுகம், நெசவாலை, வீதியமைப்பு போன்ற துறைகளிலும் ஈடுபடுத்தப்பட்ட தொகுதியினராவர். அவர்கள் 1924 முதல் 1945 வரையிலான காலப்பகுதியில், முதலில் கால்நடையாகவும் பின்னர் படகுகள், ரயில்கள் […]

மேலும் பார்க்க

இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுகளில் பிராமணரும் பிரம்மதேயமும்

14 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பொ.ஆ.மு. காலத்தில் மேலோங்கத் தொடங்கிய பிராமண மதம், கடல் கடந்து இலங்கை, கம்போடியா, தாய்லாந்து, பர்மா, ஜாவா, இந்தோனேசியா முதலான பல நாடுகளில் விரைவாகச் செல்வாக்குப் பெற்றது. அந்நாடுகளின் அரச சபைகளில் பிராமணர்க்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அரச மட்டத்திலான சடங்குகள், பிராமணர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச அதிகாரத்திற்கான சம்பிரதாயபூர்வமான அங்கீகாரத்தைப் பிராமணச் சடங்குகள் வழங்கியுள்ளன. பிராமணர் அரச ஆலோசகர்களாகவும் புரோகிதர்களாகவும் விளங்கியுள்ளனர். அரச மட்டத்தில் முதன்மைபெற்ற பிராமணச் சடங்குகள் […]

மேலும் பார்க்க

இலங்கை மலையகத் தமிழரின் கலைகளும் சமூக உருவாக்கத்தில் அதன் பாத்திரமும்

10 நிமிட வாசிப்பு

மனித இனத்தை அடையாளப்படுத்துவதில் பண்பாடு மிகமுக்கியமான அளவுகோலாகப் பயன்படுத்தப்படுகின்றது. பண்பாட்டு மானிடவியலாளர்கள் பண்பாட்டுக்கு பல்வகைப்பட்ட விளக்கங்களை வழங்கியுள்ளனர். காலமாற்றம், கலாசார – சமூக – அரசியல் – பொருளியல் உற்பத்தி உறவுகள், காலநிலை மாற்றம், அறிவியல் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், உடல் – உளவியலியல் மாற்றங்கள், சமூக ஊடாட்டங்கள், கலப்புறவுகள், மணமுறைகளில் ஏற்படும் மாறுபாடுகள், போர்கள், முரண்கள், ஏனைய உயிரினங்களுடனான உறவு, உணவுமுறை, உற்பத்தி நுட்பங்கள், ஆரோக்கிய முயற்சிகள், விருந்தோம்பல், […]

மேலும் பார்க்க

பொன்னர், சங்கர் – மரபும் மாற்றமும்

17 நிமிட வாசிப்பு

நாட்டுப்புறத் தெய்வங்களில் பல, கொலைகளில் உருவானதாகவே அமையப்பெற்றுள்ளன. அவ்வாறான சம்பவங்களின் பின்னணியிலேயே பொன்னர் – சங்கர் பற்றிய அறிதல் புலனாகிறது. முன்மாதிரியான செயற்பாடுகள், உதாரணம் பொருந்திய வாழ்க்கை முறைகள் என்பன காலம் கடந்த நிலையிலும் மக்களால் ஆராதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறான சம்பவங்களுள் ஒன்றாகவே பொன்னர் – சங்கர் பற்றிய அவதானம் கைக்கொள்ளப்படுகின்றமையை அறியலாம். தமிழ்நாட்டில் பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட பொன்னர் – சங்கர் […]

மேலும் பார்க்க

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அரசியல் மறுசீரமைப்புகளும்: சிறுபான்மை மக்களை மையப்படுத்தி ஒரு சில குறிப்புகள்

23 நிமிட வாசிப்பு

இக்கட்டுரையானது கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற S.J.V செல்வநாயகம் அவர்களின் 127வது ஜனன தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் நான் ஆற்றிய உரையினை மையப்படுத்தியதாகும். எனது உரையின் பிரதான கருப்பொருளாக அமைந்தது, தற்போது பதவியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் (NPP) அரசியல் மறுசீரமைப்புகள் தொடர்பாக வழங்கிய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப்போகின்றது, சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு கையாளப்போகின்றது, அரசியல் மறுசீரமைப்புகள் சிறுபான்மை மக்களுக்கும் […]

மேலும் பார்க்க

திருத்தந்தை பிரான்சிசும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும்

20 நிமிட வாசிப்பு
April 24, 2025 | எழில்

திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் எனும் செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருப்பதும், அடுத்த திருத்தந்தை யார் என்ற ஊகங்கள் வெளிவரத் தொடங்குவதும் வரலாற்றில் புதியது அல்ல. திருத்தந்தையின் வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக முயற்சிப்பது இயல்பானது. ஆனால், திருத்தந்தை பிரான்சிசின் (ஆட்சிக்காலம்) காலத்தை புவிசார் அரசியல் பரப்பிலிருந்து ஆராயும் பார்வை அதிகரித்திருப்பதை நிராகரிக்க முடியாது. திருத்தந்தை பிரான்சிசின் ‘புவிசார் அரசியல்’ என்ற நூல் 2019இல் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருந்ததையும் ஏனைய […]

மேலும் பார்க்க

காமன்கூத்து: பன்முக நோக்கில் ஓர் ஆய்வு

24 நிமிட வாசிப்பு

ஒரு சமூகம் தங்கள் பண்பாட்டு அம்சங்களைத் தக்கவைக்கின்ற போதே அதற்குரிய தனித்துவ அடையாளமும், இருப்பும் உறுதிப்படுத்தப்படும். அந்தப் பண்பாட்டு அம்சங்களை நிலைபெறச் செய்வதற்கு அச்சமூகத்தின் கலைகள்மீதான கவனம் இன்றியமையாததாகும். அந்தவகையில் இருநூறு வருடங்களுக்குமுன்பு புலம்பெயர்ந்த இந்தியவம்சாவளித் தமிழர்கள் தங்களது பாரம்பரிய உணர்வுடன், தம் சமூகம்சார் கலைகளைப் பாதுகாத்து வருகின்றனர். அத்தகைய கலைகளுள் காமன்கூத்துக்கலை மிக முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. அவ்வாறு முக்கியத்துவம் பெறுவதற்கு ஏதுவான காரணங்கள்பற்றி அறிய விழைவதை நோக்காகக்கொண்டு […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்