ஆங்கில மூலம் : சின்னப்பா அரசரத்தினம் ஏற்றுமதி வர்த்தகம் 17 ஆம் 18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வேறு பல பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டன. இவை ஒவ்வொன்றும் சிறிய அளவு உடையனவாயினும் யாவற்றையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது கணிசமான அளவுடையனவாக அவை இருந்தன. யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்திற்கு இவற்றின் பங்களிப்பும் கணிசமான அளவினதாக இருந்தது. இப்பொருட்களில் பனை மரமும், பனை உற்பத்திகளும் முக்கியமான ஏற்றுமதிகளாக இருந்தன. மலையாளம், கருநாடகம், மதுரை ஆகிய […]