ஒரு சமூகம் தங்கள் பண்பாட்டு அம்சங்களைத் தக்கவைக்கின்ற போதே அதற்குரிய தனித்துவ அடையாளமும், இருப்பும் உறுதிப்படுத்தப்படும். அந்தப் பண்பாட்டு அம்சங்களை நிலைபெறச் செய்வதற்கு அச்சமூகத்தின் கலைகள்மீதான கவனம் இன்றியமையாததாகும். அந்தவகையில் இருநூறு வருடங்களுக்குமுன்பு புலம்பெயர்ந்த இந்தியவம்சாவளித் தமிழர்கள் தங்களது பாரம்பரிய உணர்வுடன், தம் சமூகம்சார் கலைகளைப் பாதுகாத்து வருகின்றனர். அத்தகைய கலைகளுள் காமன்கூத்துக்கலை மிக முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. அவ்வாறு முக்கியத்துவம் பெறுவதற்கு ஏதுவான காரணங்கள்பற்றி அறிய விழைவதை நோக்காகக்கொண்டு […]
பெண் தெய்வ வழிபாட்டு மரபு பெண்தெய்வ வழிபாட்டு மரபு புதிய கற்காலம் தொட்டே உலகளாவிய ரீதியல் நிலைபெற்றிருந்தமையை அறியலாம். அகழ்வாராய்வுகளில் பெண் தெய்வங்களின் உருவச்சிலைகள் கிடைக்கப்பெற்றமை தக்க சான்றுகளாகும். எகிப்தில் ‘இசிஸ்’, ‘சிபிஸ்’ போன்ற பெண் தெய்வ வழிபாடுகள், சிரியாவில் ‘அஸ்தாத்’ எனும் பெண் தெய்வ வழிபாடு போன்ற பாரம்பரியங்களும் குறிப்பிடத்தக்கவைகளாகும். “நதிக்கரை நாகரிகங்களில் நிலவிய தாய்வழிச் சமூக அமைப்பின் காரணமாகவே பெண் தெய்வ வழிபாட்டு மரபு தோன்றியிருக்கிறது” என்பர் […]