இளங்கோவின், ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ கட்டுரைத் தொகுப்பில் 13 நூல்களைப் பற்றிய பார்வைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவையாவன: அனுக் அருட்பிரகாசத்தின் ‘வடக்கிற்கான ஒரு பயணம்’ (A Passage North), ‘ஒரு குறுகிய திருமணத்தின் கதை’ (The Story of a Brief Marriage), வாசுகி கணேசானந்தனின் ‘சகோதரனற்ற இரவு’ (Brotherless Night), ‘காதல் திருமணம்’ (Love Marriage), நிரோமி டீ ஸொய்சாவின் ‘தமிழ்ப் பெண்புலி’ (Tamil Tigress), ஷியாம் செல்வதுரையின் […]
ஈழத்து நூலியல் மற்றும் அவை தொடர்பான பதிவுகளின் முதன்மைத் தரவுப் பெட்டகமாகத் திகழும் திரு. நடராஜா செல்வராஜா அவர்களின் ‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்: ஒரு வரலாற்றுத் தேடல்’ எனும் ஆய்வு நூல், இலங்கைத் தமிழ் மக்களின் அறிவுப் பாரம்பரியத்தின் ஆழமான வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு மிக முக்கியமான வரலாற்றுச் சான்றாகும். இது எழுநா நூல் வரிசையின் 28ஆவது வெளியீடாக 231 பக்கங்களைக் கொண்டு 2025ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. […]
2025இல் குமரன் புத்தக இல்லமும் எழுநாவும் இணைந்து வெளியிட்ட, கட்டடக்கலைஞர் இ. மயூரநாதன் எழுதிய ‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு: 1621-1948’ எனும் நூல், 300 ஆண்டுகளுக்கும் மேலான காலனிய கால யாழ்ப்பாண நகரத்தின் வரலாற்றை ஏறத்தாழ 500 பக்கங்களில் ஆராய்கிறது. நகர வரலாற்றியல் சார்ந்த இந்நூலின் கருப்பொருளாக அமைவது இன்றைய யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள் அடங்கிய யாழ்ப்பாண நகரம் ஆகும். ஆசிரியர் தற்போதைய யாழ்ப்பாண நகரத்தின் தோற்றத்தினைப் போர்த்துக்கேயர் […]
‘கிழக்கு மாகாணம்’ குறித்த வரலாற்று நூல்களில் ‘மட்டக்களப்பு மான்மியம்’, ‘மட்டக்களப்புத் தமிழகம்’ போன்றவை பிரசித்தி பெற்றவையாகும். அவற்றைத் தொடர்ந்து மட்டக்களப்பு பிரதேசம் சார்ந்து எழுதப்பட்டு வந்த பெருவாரியான நூல்கள் கூட இந்நூல்களை அடிப்படையாகக் கொண்டே விரிவதனை நாம் அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் மேற்படி நூல்கள் கட்டியமைத்த வரலாற்றுப் பதிவுகளில் பெரும்பாலானவை ‘முற்குக மைய’ வரலாறுகளாகவே அறியப்படுகின்றன. இத்தகைய மைய நீரோட்ட அரசியல் வரலாற்றெழுதல்களின் காரணமாக விளிம்பு நிலைக்குப் புறமொதுக்கப்பட்ட […]
இலங்கையில் அண்மைக்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு பிரம்மாண்ட உள்கட்டமைப்பு மற்றும் நவீன அபிவிருத்தித் திட்டங்களின் பின்னாலுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், மறைக்கப்பட்ட பொருளாதாரக் காரணிகளையும் விரிவான தரவுசார்ந்த ஆய்வுகளுடன் விவரிக்கிறது கலாநிதி ஞாலசீர்த்தி மீநிலங்கோவின் ‘பசுமை எனும் பேராபாயம்’ என்ற நூல். தற்காலச் சூழலியல் கொள்கைகள் குறித்த முறையான விசாரணையையும், புறவயமான விமர்சனப் பார்வையையும் முன்வைக்கும் இந்நூலின் உள்ளடக்கத்தை விரிவாக ஆராயும்போது மட்டுமே, இதன் முகப்புத் தலைப்பில் உள்ள குறியீட்டுத் தனித்துவத்தையும் அதன் […]
ஆங்கிலத்தில் வெளியான 13 நூல்களின் வாசிப்பனுபவங்கள் தொடர்பிலான கட்டுரைகளின் தொகுப்பே இளங்கோவின் ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’. எழுநாவின் வெளியீடாக வந்துள்ள இந்நூலின் அட்டைப்படம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளங்கோவின் வீடு என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது பயணங்களின் போது போரினால் கைவிடப்பட்ட வீடுகளைப் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வை மீட்டிப் பார்க்க வைத்தது. அந்த வீடுகளின் ஏக்கமும், அவை கொண்டுள்ள கதைகளும் ஏராளம். உண்மையில் இந்நூலை வாசிக்கின்றபோது 112 பக்கங்களுக்குள் 13 நூல்களை […]
அமரசிங்கம் கேதீஸ்வரன் எழுதிய ‘வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற நூலுக்கான மதிப்பீட்டை மேற்கொள்வதில் பெருமை கொள்கிறேன். 2025இல் வெளிவந்துள்ள இந்நூல் ஒன்பது அத்தியாயங்களையும் 168 பக்கங்களையும் கொண்டுள்ளதுடன், அழகுற வடிவமைக்கப்பட்ட அட்டைப்படத்தையும் கொண்டிருக்கிறது. இதற்கான அணிந்துரைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவராலும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராலும் எழுதப்பட்டுள்ளன. நூலாசிரியர் என்னுரை என்ற பகுதியைத் தந்துள்ளார். எங்கள் எல்லோருக்கும் பரிச்சயமான நூலாசிரியரின் தாயாருக்கு இந்நூல் […]
பொதுவாகவே நூல் விமர்சனங்கள் – அறிமுகங்கள் மிக முக்கியமானவை. இவை படைப்பாளிக்கும் நுகர்வோருக்கும் (வாசகர்-வாசிப்பவர்) இடையில் ஒரு நெருக்கத்தை உண்டாக்குகின்றன. நுகர்வோரின் கருத்துகளை மீள் பரிசீலிக்கின்றன. நுகர்வோருக்கான தேடலை அதிகரிக்கின்றன. அதே சமயம் விமர்சகரின் அனுபவங்கள், அறிந்தவை, கருத்தியல் என்பன விமர்சனத்தினூடாக வெளிப்படுகின்றன. இது நுகர்வோருக்கு விமர்சகர்களை விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கும் வழிவகுக்கின்றது. இளங்கோவின் ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ நூலையும் அறிமுகப்படுத்துவதில் அவசியம் உள்ளது. எழுநாவின் வெளியீடான இந்நூலை […]
ஒரு சமூகத்தின் வரலாறு, கலாசாரம், அடையாளம் மற்றும் அரசியல் இருப்பு ஆகியவற்றின் அசைக்க முடியாத அடித்தளமே நிலம் என்பதாகும். சிறுபான்மை இனக்குழுக்களைப் பொறுத்தவரையில், நிலம் என்பது அவர்களின் கூட்டுரிமை, சுயஅடையாளம் மற்றும் சுயநிர்ணய உரிமையின் மையக் கூறாக விளங்குகின்றது. எனவேதான், உலகெங்கிலும் உள்ள பழங்குடியின மக்களும் சிறுபான்மைத் தேசிய இனங்களும் தங்களின் தனித்துவமான அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், பாரம்பரிய நிலங்களைப் பாதுகாக்கவும் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். மறுபுறம், வரலாற்றைப் பின்னோக்கிப் […]
மீநிலங்கோ அவர்கள் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். ‘அபிவிருத்தி, சக்தி மற்றும் பேண்தகைமை’ முதுகலை திட்டத்தை வழிநடத்துகிறார். மானுடப் புவியியல் புலமையுடன் சமூக விஞ்ஞான ஆய்வுத் துறைகளிலும் நிபுணத்துவம் உடையவர். இலக்கியம், விமர்சனம் ஆகிய துறைகளிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வருபவர். இந்நூல் இலங்கையை மையப்படுத்தி, பசுமை என்ற எண்ணக்கரு, இலங்கையில் சூழலியல், சுதந்திர இலங்கையின் குடியேற்றத் திட்டங்கள், மகாவலி அபிவிருத்தித் திட்டம், இலங்கையில் நீர்மின்சாரம், நீலப்புரட்சி, மேல்கொத்மலைத் திட்டம், […]