November 2025 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு ஆய்வுகள்

7 நிமிட வாசிப்பு
February 27, 2026

‘உத்தியாக்கள்’ என்பது ‘முன்னோர்கள்’ எனப் பொருள்படும். அதாவது வேடர்கள் தமது முன்னோர்களை அவர்களது மொழியில் ‘உத்தியாக்கள்’ என அழைப்பது வழக்கம். பேராசிரியர் மௌனகுரு அவர்கள் தனது அணிந்துரையில், திராவிட மொழியில் ‘உத்தி’ என்பது ‘மேலே’ என்பதைக் குறிக்கும் என்கிறார். அப்படியானால் மேலே சென்றவர்களை, அதாவது முன்னோர்களைக் குறிக்கும் என்கிறார். இந்நூலானது அணிந்துரை தொடக்கம் பதினொரு அத்தியாயங்களுடன் பின்னணைப்புகள் ஈறாக 176 பக்கங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது. வேடர் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் […]

மேலும் பார்க்க

ஒரு பழங்குடியின் தார்மீகக் கோபம் – ‘உத்தியாக்கள்’

11 நிமிட வாசிப்பு
February 9, 2026

பேத்தாளை பொது நூலகத்தில் இடம்பெற்ற ‘நிலா முற்றம்’ நிகழ்ச்சியில் கமலநாதன் பத்திநாதன் அவர்களுடைய ‘உத்தியாக்கள்’ நூல் மீதான என்னுடைய வாசிப்பு அனுபவ உரையினை உலக ஆதிவாசிகள் தினமான இன்று (2025.08.09) பகிர்ந்து கொள்கின்றேன். தான் வாழ்ந்த சமூகத்தைப் பற்றி, அதுவும் காலந்தோறும் ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் தன் சமூகம் குறித்து, அவர்களது வாழ்வியல், பண்பாட்டு அம்சங்களை ஆய்வு செய்து முறைப்படுத்தி ஒரு நூலாக வெளியிட்டிருப்பது, அந்த சமூகத்திற்கு அவர் […]

மேலும் பார்க்க

நூல் மதிப்புரை: யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்

15 நிமிட வாசிப்பு
January 31, 2026

நூல்: யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும் தொகுப்பும் தமிழாக்கமும் : கந்தையா சண்முகலிங்கம் பதிப்பகம்: எழுநா ஆண்டு: 2025 பக்கங்கள்: 268 விலை: 1, 500 இலங்கை ரூபா ஈழத் தமிழ்ச் சமூகம் நீண்ட நெடிய வரலாற்றின் ஊடாகக் கட்டமைந்த ஒன்று. இந்த வரலாறு என்றுமே உறைபனியல்ல. அது ஓடும் ஜீவநதி. அதனால்தான் இந்தியத் தமிழ்ச் சமூகத்தைக் காட்டிலும் ஈழச் சமூகம் மாறுபட்ட தொன்மை, தொடர்ச்சி, அசைவியக்கங்களைக் கொண்டுள்ளது. […]

மேலும் பார்க்க

பசுமை எனும் பேரபாயம்: சூழலியல் பற்றிய மறுபார்வை

3 நிமிட வாசிப்பு
December 8, 2025

தோழர் மீநிலங்கோ தெய்வேந்திரன் எழுதி, ‘எழுநா’ வெளியீடாக வெளிவந்திருக்கிறது ‘பசுமை எனும் பேரபாயம்’ என்கிற நூல். இதன் விலை: 1400 இலங்கை ரூபாய். இலங்கைச் சூழலில் சூழலியம் சார்ந்து வெளிவந்திருக்கும் மிக முக்கியமான நூல் இது. உலகமயம் என்கிற மாயக்கரம் எல்லை தாண்டி மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களை, அபிவிருத்தித் திட்டங்கள் என்கிற பெயரில் கொள்ளையிடுகின்றன. மிதமிஞ்சிய வளச்சுரண்டல் எம் நாடுகளைப் பாலைவனமாக்கக் காத்திருக்கிறது. இந்தச் சூழலில் அபிவிருத்தித் […]

மேலும் பார்க்க

கிருசாந்தி இன்னும் ஏன் வாசலிலே நிற்கிறார்? 

5 நிமிட வாசிப்பு
November 6, 2025

இப்புத்தகத்திற்கு ஏன் வாசலிலே கிருசாந்தி எனப் பெயர் வந்தது? கிருசாந்தி உயிருடன் இல்லை, ஆனால் அவரது ஆத்மா, அவரது குரல் இன்றும் நீதி கேட்டு வாசலிலே நிற்கிறது. இப்புத்தக அறிமுகத்திற்குச் செல்ல முன்னர், இப்புத்தகம் தோன்றியமைக்கு ஒரு காரணம் உண்டு. அதனைச் சற்று எட்டிப் பார்த்துவிட்டு வர எண்ணுகிறேன். நம் அனைவருக்கும் தெரியும் ‘கிருசாந்தி குமாரசுவாமி’யின் பாலியல் பலாத்காரப் படுகொலை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிர்வலைகள் கொஞ்சநஞ்சமல்ல, இன்றுவரை அவ் […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும் – காலத்தின் தேவை கருதிய நூல்

3 நிமிட வாசிப்பு
October 30, 2025

முனைவர் சின்னத்துரை ஜேம்சன் அரசகேசரி அவர்கள் எழுதிய ‘வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ என்னும் நூல் வடக்கு – கிழக்கின் பிராந்திய அபிவிருத்திக்கு மிகவும் இன்றியமையாததாகின்றது. வடக்கு – கிழக்குப் பிரதேசங்கள் தனித்துவமான தரைத்தோற்றங்களைக் கொண்ட அழகிய, வளமிக்க நிலப்பரப்புகளாக இருப்பதோடு மட்டுமல்லாது பரந்துபட்ட உயிர்ப்பல்வகைமையையும் கொண்டுள்ளன. இருப்பினும் அதன் அபிவிருத்தி நோக்கில், உயிர்ப்பல்வகைமையின் இருப்புப் பற்றி எழுதப்பட்ட நூல்கள் அரிதாகவே உள்ளன. வடக்கு – கிழக்குப் […]

மேலும் பார்க்க

மாறுபாடில்லா உண்டி: சித்த மருத்துவ நோக்கில் யாழ்ப்பாணத்தின் உணவுப் பாரம்பரியம்

6 நிமிட வாசிப்பு
October 24, 2025

பசி என்பது ஓர் உயிரியல் தூண்டல்; எல்லா உயிரினங்களிடமும் நிலவும் பொதுவான பண்பியல்பும் கூட. பசி உணர்வின் எதிர்வினையாக அமைவது உணவு. எல்லா உயிரினங்களும் உணவினை உண்ணுதலை தங்களின் வாழ்வின் ஒரு பகுதியாக பழக்கப்படுத்தியுள்ளன. ஆனால் மனிதன் மட்டும் உணவினைப் பதப்படுத்தி சமைத்து உண்ணும் நடைமுறையினை ஏற்படுத்திக் கொண்டுள்ளான். இதுவே உணவின் உடலியல் தேவையினைக் கடந்து பண்பாட்டின் பரிமாணமாக வியாபித்துள்ளது.  உலகில் உள்ள ஒவ்வொரு பகுதியினரும் உணவினைத் தங்களின் பண்பாட்டு […]

மேலும் பார்க்க

கிழக்கிலங்கை வேடர்களின் பண்பாட்டு அசைவுகள் பற்றிய அகத்தார் ஆய்வு

8 நிமிட வாசிப்பு
October 14, 2025

கடந்த 2025.07.20 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் எழுநாவால் பிரசுரிக்கப்பட்ட க. பத்திநாதனின் ‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ நூல் வெளியீடு இடம்பெற்றது.  இலங்கை வேடர் பற்றி எழுதிய செலிக்மன் தம்பதி, கணநாத் ஒபேயசேகர, ஈழத்துப் பூராடனார் முதலான புலமையாளர் வரிசையில் இணைந்து கொண்டிருக்கிறார் நூலாசிரியர் க. பத்திநாதன். இத்துறையில் வேறெந்த முன்னோடி போலவுமில்லாமல், ‘அகத்தார்’ தரப்பில் எழுந்த முதற்குரல் என்பது […]

மேலும் பார்க்க

உத்தியாக்கள்: சில நினைவலைகள் 

7 நிமிட வாசிப்பு
October 3, 2025

உத்தி என்றால் கன்னட மொழியிலேயே ‘மேலே’ என்று அர்த்தம் என பேராசிரியர் ரகுபதி என்னிடம் ஒரு முறை கூறினார். 1980களில் இது நடந்தது. இன்றைக்கு 45 வருடங்களுக்கு முன்னர் என் ஆய்வைப் படித்தபின் அவர் இப்படிக் கூறியமை நினைவுக்கு வருகிறது. எனது கலாநிதிப்பட்ட ஆய்வில் இந்த உத்தியாக்களைப் பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன். மட்டக்களப்பின் கடற்கரையோரம் வாழ்கின்ற வேடர் சமூகம், இறந்தபின் உயிரோடு மேலே வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கும் தம் முன்னோர்களுக்குச் செய்யும் […]

மேலும் பார்க்க

‘எழுநா’வின் பதிப்புலகம்

7 நிமிட வாசிப்பு
September 25, 2025

ஜூலை 20, 2025, ‘எழுநா: 30 ஆவது வெளியீடு’ கலந்துரையாடலுக்கு நண்பர், எழுத்தாளர், இதழாளர் நடராஜா முரளீதரனின் அழைப்பின் பேரில் சென்று, கலந்து, பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ‘எழுநா’ யாழ்ப்பாணத்தில் கருக்கொண்டு ரொறோண்டோ, கனடாவில் பிரசவமாகும் ஒரு மாத இதழ். சஞ்சிகைக்கும் ஜேர்ணலுக்கும் இடையிலான தன்மையுடன் வெளிவருவதாக அதை நான் கருதுவதுண்டு. ஸ்காபரோவிலுள்ள கனடிய தமிழர் பேரவை மண்டபத்தில் (ஆம், அதே தான்!) சுமார் 4:00 மணிக்கு ஆரம்பமாகி சுமார் […]

மேலும் பார்க்க