இந்தியாவில் பொ.ஆ.மு. காலத்தில் மேலோங்கத் தொடங்கிய பிராமண மதம், கடல் கடந்து இலங்கை, கம்போடியா, தாய்லாந்து, பர்மா, ஜாவா, இந்தோனேசியா முதலான பல நாடுகளில் விரைவாகச் செல்வாக்குப் பெற்றது. அந்நாடுகளின் அரச சபைகளில் பிராமணர்க்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அரச மட்டத்திலான சடங்குகள், பிராமணர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச அதிகாரத்திற்கான சம்பிரதாயபூர்வமான அங்கீகாரத்தைப் பிராமணச் சடங்குகள் வழங்கியுள்ளன. பிராமணர் அரச ஆலோசகர்களாகவும் புரோகிதர்களாகவும் விளங்கியுள்ளனர். அரச மட்டத்தில் முதன்மைபெற்ற பிராமணச் சடங்குகள் […]