ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கென பல்வேறு பரிமாணங்கள் உண்டு. அந்தப் பரிமாணங்களின் பாதைகள் சமாந்தரமாகப் பயணித்தாலும் அதன் தொடக்கமும், இலக்கும் ஒன்றாகவே இருக்கின்றன. விராஜினுடைய ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான பங்களிப்பு அரசியல் செயற்பாட்டுத் தளத்திலே காத்திரமானதாக அமைந்திருந்தது. தமிழினப் படுகொலை, அரசியல் வரலாற்று நிகழ்முறைக்கூடான பரிமாணத்தில் கட்டமைக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்டு, தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் விராஜினுடைய பங்களிப்பு முன்னெப்போதும் இல்லாதவாறு அவசியமானதாகவும் சுதந்திரமானதாகவும் அமைந்திருந்தது. விராஜினுடைய […]