அறிமுகம் தற்கால உலகளாவிய அபிவிருத்திப் போக்கானது பேண்தகைமையுடையதாக இல்லை என்பதை சூழல், பொருளாதாரம் மற்றும் சமூகக் குறிகாட்டிகள் எடுத்தியம்புவதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிடுகின்றது. மேலும், வளங்கள் வரையறுக்கப்பட்டவையாக இருப்பதுடன், அதிகரித்த சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் இருப்பதால், பேண்தகு அபிவிருத்தியே இதற்கு ஒரே தீர்வாகும் எனவும் ஐ.நா வலியுறுத்துகின்றது. தமக்கான பேண்தகு அபிவிருத்திக்கான பயணத்தில் ஒவ்வோரு நாடும், பல்வேறு சவால்களினை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இச்சவால்களில் பல, எல்லா நாடுகளுக்கும் பொதுவானவையாகவும், […]