ஈழத்தில் காந்தீய இயக்கம்: வகிபாகமும் மீள்வாசிப்பும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
20 நிமிட பார்வை
ஈழத்தில் காந்தீய இயக்கம்: வகிபாகமும் மீள்வாசிப்பும்

ஈழத்தில் காந்தீய இயக்கம்: வகிபாகமும் மீள்வாசிப்பும்

October 27, 2026 | Ezhuna

அரசியல் விடுதலை நிலைபெறுவதற்குச் சமூக விடுதலை, பொருளாதாரத் தன்னிறைவு, மனித மூலதன வளர்ச்சி ஆகியவை அவசியம். இவற்றை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டதே ஈழத்துக் ‘காந்தீய’ இயக்கம். 1976இல் வவுனியாவில் நிறுவப்பட்ட இவ்வியக்கம், உள்ளூர் மற்றும் சர்வதேச நிதியுதவியுடன் நிவாரணம், கல்வி, சுகாதாரம், விவசாயம், சிறுதொழில் எனப் பல்வேறு துறைகளில் விரிவடைந்தது. தமிழ்த்தேசிய உணர்வுகொண்ட இளைஞர்களின் பங்கேற்புடன், நிலத்தை உற்பத்தி வளமாக மாற்றி, சமூகத் தன்னிறைவையும் மக்கள் ஒருங்கிணைப்பையும் வளர்த்தெடுத்தது. 1977ஆம் ஆண்டு இனவன்முறையைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் நின்றுவிடாமல், அவர்களை நிலத்துடனும் உற்பத்திச் செயற்பாடுகளுடனும் இணைத்து, ஒருங்கிணைந்த பண்ணைகளையும் குடியேற்றங்களையும் உருவாக்கியது. எனினும், இக்குடியேற்றங்கள் நிலவியல் அரசியலுடன் தொடர்புபடுத்தப்பட்டதால், அரசியல் விளைவுகளை எதிர்கொண்டன; இறுதியில், இயக்கத்தின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. இருப்பினும், போருக்குப் பிந்தைய சமூக மறுகட்டமைப்பில் ஈழத்துக் காந்தீய இயக்கத்தின் அனுபவங்களை வழிகாட்டியாகக் கொள்வதற்கான தேவை இன்று எழுந்துள்ளது. இந்தப் பின்னணியில், அவ்வியக்கத்தின் செயற்பாடுகளையும் வகிபாகத்தையும் விமர்சன நோக்கில் மீள்வாசிப்புச் செய்யும் வகையில் ‘ஈழத்தில் காந்தீய இயக்கம்: வகிபாகமும் மீள்வாசிப்பும்’ எனும் இத்தொடர் எழுதப்படுகிறது.

ஈழத்தில் காந்தீய இயக்கம்: வகிபாகமும் மீள்வாசிப்பும்

அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்