இலங்கையில் தமிழ் பெளத்தம்
பௌத்தமும் ஈழமும் – பகுதி 2
19 நிமிட வாசிப்பு
ஈழத்தின் வாயிலாக அமைந்த மணிபல்லவத்தில் புத்தர் முதன்முதலாக வந்தார் எனப் பௌத்த நூல்கள் கூறுகின்றன. புத்தர் வந்தார் என்பது மகிந்தர் முதலான தேரர்களின் வருகையைக் குறிப்பதாகும். தமிழ் நாகர்களின் அரசில் மணிபல்லவம் முதல்நிலை பௌத்த புனிதத் தலமாயிற்று. நாக அரசைக் கடந்து அநுராதபுரம் சென்ற மகிந்தன் அங்கு சமயப் பரப்புரை செய்ய எடுப்பித்த விகாரை பிற்காலத்தில் மகிந்தலை (மகிந்தனின் தலைமையிடம்) என அழைக்கப்படுவதாயிற்று. தமிழ் பௌத்தருக்கு மணிபல்லவம் தலை இடம் […]
மேலும் பார்க்க
பௌத்தமும் ஈழமும் – பகுதி 1
17 நிமிட வாசிப்பு
தமிழகத்தில் வழங்கும் சமயங்களினைப் புறத்தே இருந்து வந்த சமயங்கள், அகத்தே நிலவிய சமயங்கள் எனும் இரு பிரிவுகளில் அடக்கலாம். சமணம், பௌத்தம் முதலானவை சங்ககால தமிழ்ச் சமூகவியலில் புறத்தேயிருந்து வந்த பெருஞ் சமயங்களாகும். ஆசிவகம் தமிழகத்திலிருந்தே நாவலத்தீவு முழுதிற்கும் பரவிற்று என்று ஒரு சாரரும், வடகோடியிலிருந்தே தமிழகம் போந்ததென்று ஒருசாரரும் குறிப்பிடுவர். புறச்சமயங்கள் தமிழ்த் தாயகங்களுக்கு எவ்வகையில், எவ்விடத்தின் வழிநுழைந்தன என்பனவற்றினைக் குறித்து ஆய்ந்து அறிந்து கொள்ளுவதற்கு, அச் சமயங்களின் […]
மேலும் பார்க்க
பெருங்கற்பண்பாட்டுக் கால இலங்கையில் தமிழரும் பௌத்தமும்
16 நிமிட வாசிப்பு
கி.மு.3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இலங்கையில் அறிமுகமாவதற்கு முன்னர் இங்கு நிலவிய பெருங்கற்காலப் பண்பாட்டுடன் பொதுவானதொரு பண்பாடு இலங்கை முழுவதிலும் காணப்பட்டது. இப்பண்பாட்டின் பரவல், செறிவு, வளர்ச்சி, அவற்றின் வளங்கள் என்பன இடத்திற்கு இடம் வேறுபட்டு காணப்பட்டமைக்கு அவ்வவ்விடங்களில் காணப்பட்ட பௌதீக வளங்கள் காரணமாக இருப்பினும் அவை பெருங்கற்காலப் பண்பாட்டுடன் ஏற்பட்ட அபிவிருத்திகளாகும். இப்பண்பாடு அறிமுகமாவதற்கு முன்னர் இலங்கையில் மலைநாடு தொட்டு தாழ்நிலம் வரை ஏறத்தாழ 75 இற்கு […]
மேலும் பார்க்க
வல்லிபுரப் பொற்சாசனம் : பேராசிரியர் பரணவிதான அவர்களின் வாசிப்பின் மீதான விமர்சனமும் மீள் வாசிப்பும்
17 நிமிட வாசிப்பு
யாழ்ப்பாணத்தில் வல்லிபுரத்திலிருக்கும் விஷ்ணு கோயிலுக்குச் சமீபமாக இருந்த பௌத்த கோயில்களின் அழிபாடுகளைப் பற்றி அப்பகுதி மக்கள் பல தலைமுறைகளாக அறிந்திருந்தார்கள். 1916 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராக இருந்த லூயிஸ், வல்லிபுரத்தைப் பார்வையிடச் சென்ற சமயம் விஷ்ணு கோயிலின் பூசகர் அப்பகுதியிலிருந்த பௌத்த கோயில்களின் அழிபாடுகளை அரசாங்க அதிபரைக் கூட்டிச் சென்று காண்பித்தார். இதைத் தொடர்ந்து வல்லிபுரத்திலிருந்த பௌத்த கோயில்களின் அழிபாடுகள் இருந்த இடத்தில் 1936 இல் அகழ்வுகள் […]
மேலும் பார்க்க
புராதனகால யாழ்ப்பாணத்தில் பௌத்தமும் தமிழும் – பகுதி 3
17 நிமிட வாசிப்பு
பௌத்த சிற்பங்கள் இலங்கையில் உன்னதமான வேலைப்பாடுகளான பௌத்த சிற்பங்கள் பெருந்தொகையிலே காணப்படுகின்றன. ஆதியில் தர்மச்சக்கரம், புத்தர்பாதம், போதிமரம் என்பனவே வழிபாட்டுச் சின்னங்களாக விளங்கின. ஆயினும் கிரேக்கரின் செல்வாக்கினால் உருவ வழிபாடு இந்திய சமயங்களிடையில் வழமையாகிவிட்டது. இலங்கையில் இரண்டாம் நூற்றாண்டளவில் புத்தர் படிமங்களை வழிபடுவது வழமையாகிவிட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள புத்தர் படிமங்கள் கிபி. 300-500 வரையான காலப்பகுதிக்குரியனவாகத் தெரிகின்றன. கந்தரோடை, சுண்ணாகம், வல்லிபுரம், நவக்கீரி ஆகியவிடங்களிற் புத்தர் படிமங்கள் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துப் பௌத்த சமயந் […]
மேலும் பார்க்க
புராதனகால யாழ்ப்பாணத்தில் பௌத்தமும் தமிழும் – பகுதி 2
16 நிமிட வாசிப்பு
யாழ்ப்பாணக் குடாநாட்டினை நாகதீப என்று மகாவம்சம் முதலான பாளி நூல்கள் குறிப்பிடுகின்றன. அதனை நாகநாடு என்று மணிமேகலையிற் குறிப்பிட்டுள்ளனர். நாகர் செறிந்து வாழ்ந்தமையின் காரணமாக அப்பெயர் உருவாகியுள்ளது. மட்டக்களப்பு பூர்வசரித்திரம் நாகதீவு என்னும் பெயரால் யாழ்ப்பாணத்தைக் குறிப்பிடுகின்றது. நாகதீபத்தில் ஆதிக்கம் பெற்றிருந்த நாக அரசர்களைப் பற்றிய கதை மகாவம்சத்திற் சொல்லப்படுகின்றது. நாகதீவின் அருகிலே கடலில் அமைந்துள்ள தீவொன்றில் காணப்பட்டதும் அதிசயங்களின் நிலைக்களம் ஆகியதுமான பௌத்த பீடமொன்றினைக் கைவசப்படுத்தும் நோக்கத்துடன் மகோதரன், […]
மேலும் பார்க்க
புராதனகால யாழ்ப்பாணத்தில் பௌத்தமும் தமிழும் – பகுதி 1
19 நிமிட வாசிப்பு
அறிமுகம் இலங்கையில் கிமு. பத்தாம் நூற்றாண்டு முதலாகப் பரவிய பெருங்கற்காலப் பண்பாடு நாகரோடு தொடர்புடையது. அந்தப் பண்பாட்டினை நாகர் பரப்பினார்கள் என்பதையும் அவர்கள் தமிழ் மொழி பேசியவர்கள் என்பதையும் அப்பண்பாட்டு மக்களின் ஈமத் தலங்கள் சிலவற்றிலுள்ள ஈமக் கல்லறைகளின் கல்வெட்டுகளினால் அறிய முடிகின்றது. எழுத்தின் பயன்பாடு அறிமுகமாகியதும் நாகர் ஈமக் கல்லறைகளிலே சொற்களையும் இரு வசனங்களையும் ஒரு கிரயாபூர்வமான முறையிலே பதிவுசெய்தனர். அவை நாகரைப் பற்றியவை. தமிழ் மொழியில் எழுதப்பட்டவை. தமிழ்ப் […]
மேலும் பார்க்க
இலங்கையில் தமிழ் பௌத்தர் – பகுதி 3
22 நிமிட வாசிப்பு
சிங்கள மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தமிழ்நாட்டில் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சி இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்பட முடியும். இரு நாடுகளுக்கும் இடையில் இந்து சமய உறவுகள் இருந்ததற்கான ஆதாரமாக இலங்கை வடமாகாணத்தில் அமைந்துள்ள திருக்கேதீசுவரம் பற்றிய பக்தி பாடல் ஒன்றும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் கோயிலைப் பற்றிய பக்தி பாடல் ஒன்றும் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டுள்ளமையை கூறலாம். மேலும் சைவ மத பிரச்சாரகராக விளங்கிய சுந்தரர் கிபி. […]
மேலும் பார்க்க
ஈழமும் தமிழகமும் : பௌத்த சமயத் தொடர்புகள் – பகுதி 2
13 நிமிட வாசிப்பு
தமிழகத்துப் பௌத்தப் பள்ளிகளும் உரையாசிரியர்களும் பாளி மொழியில் அமைந்த பௌத்த இலக்கியங்களுக்கு உரை எழுதியவர்களில் புத்ததத்தர், புத்தகோஷர் என்போர் மேதாவிலாசமானவர்கள். அவர்களில் மூத்தவரான புத்ததத்தர் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த விகாரங்களில் வாழ்ந்தவர். அவர் இளமைக் காலத்திலே மகாவிகாரையிலே தங்கியிருந்து துறவியாக ஞானஸ்தானம் பெற்றவர். வடஇந்தியாவிலே பிறந்த புத்தகோஷர் காஞ்சிபுரம், காவிப்பூம் பட்டினம், அநுராதபுரம் ஆகியவற்றிலுள்ள விகாரங்களிலே தங்கியிருந்து திரிபிடகத்தின் ஏடுகளை ஆய்வு செய்தவர். அவர்கள் இருவரும் எழுதிய நூல்கள் தேரவாதம் நிலைபெறும் […]
மேலும் பார்க்க
இலங்கையில் தமிழ் பௌத்தர் – பகுதி 2
23 நிமிட வாசிப்பு
சிங்கள மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன இலங்கைத் தமிழர்களுக்கு பௌத்தம் ஏன் அந்நியமாகிப் போனது? தமிழ் பௌத்தம் இலங்கையில் ஏன் அழிந்தது? இந்த கேள்விகளுக்கான பதில்கள் தமிழர் ஒருவரிடம் இருந்து தான் வர வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு தமிழரை எம்மால் காணமுடியவில்லை. அதனால் அந்த தமிழ் மனிதனைப் பற்றிய விவரங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் புத்த பாரம்பரியம் குறித்த சர்வதேச கல்வி மாநாடு 1992 […]
மேலும் பார்க்க