Opinions - Page 2 of 3 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கிருசாந்தி இன்னும் ஏன் வாசலிலே நிற்கிறார்? 

5 நிமிட வாசிப்பு
November 6, 2025

இப்புத்தகத்திற்கு ஏன் வாசலிலே கிருசாந்தி எனப் பெயர் வந்தது? கிருசாந்தி உயிருடன் இல்லை, ஆனால் அவரது ஆத்மா, அவரது குரல் இன்றும் நீதி கேட்டு வாசலிலே நிற்கிறது. இப்புத்தக அறிமுகத்திற்குச் செல்ல முன்னர், இப்புத்தகம் தோன்றியமைக்கு ஒரு காரணம் உண்டு. அதனைச் சற்று எட்டிப் பார்த்துவிட்டு வர எண்ணுகிறேன். நம் அனைவருக்கும் தெரியும் ‘கிருசாந்தி குமாரசுவாமி’யின் பாலியல் பலாத்காரப் படுகொலை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிர்வலைகள் கொஞ்சநஞ்சமல்ல, இன்றுவரை அவ் […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும் – காலத்தின் தேவை கருதிய நூல்

3 நிமிட வாசிப்பு
October 30, 2025

முனைவர் சின்னத்துரை ஜேம்சன் அரசகேசரி அவர்கள் எழுதிய ‘வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ என்னும் நூல் வடக்கு – கிழக்கின் பிராந்திய அபிவிருத்திக்கு மிகவும் இன்றியமையாததாகின்றது. வடக்கு – கிழக்குப் பிரதேசங்கள் தனித்துவமான தரைத்தோற்றங்களைக் கொண்ட அழகிய, வளமிக்க நிலப்பரப்புகளாக இருப்பதோடு மட்டுமல்லாது பரந்துபட்ட உயிர்ப்பல்வகைமையையும் கொண்டுள்ளன. இருப்பினும் அதன் அபிவிருத்தி நோக்கில், உயிர்ப்பல்வகைமையின் இருப்புப் பற்றி எழுதப்பட்ட நூல்கள் அரிதாகவே உள்ளன. வடக்கு – கிழக்குப் […]

மேலும் பார்க்க

மாறுபாடில்லா உண்டி: சித்த மருத்துவ நோக்கில் யாழ்ப்பாணத்தின் உணவுப் பாரம்பரியம்

6 நிமிட வாசிப்பு
October 24, 2025

பசி என்பது ஓர் உயிரியல் தூண்டல்; எல்லா உயிரினங்களிடமும் நிலவும் பொதுவான பண்பியல்பும் கூட. பசி உணர்வின் எதிர்வினையாக அமைவது உணவு. எல்லா உயிரினங்களும் உணவினை உண்ணுதலை தங்களின் வாழ்வின் ஒரு பகுதியாக பழக்கப்படுத்தியுள்ளன. ஆனால் மனிதன் மட்டும் உணவினைப் பதப்படுத்தி சமைத்து உண்ணும் நடைமுறையினை ஏற்படுத்திக் கொண்டுள்ளான். இதுவே உணவின் உடலியல் தேவையினைக் கடந்து பண்பாட்டின் பரிமாணமாக வியாபித்துள்ளது.  உலகில் உள்ள ஒவ்வொரு பகுதியினரும் உணவினைத் தங்களின் பண்பாட்டு […]

மேலும் பார்க்க

கிழக்கிலங்கை வேடர்களின் பண்பாட்டு அசைவுகள் பற்றிய அகத்தார் ஆய்வு

8 நிமிட வாசிப்பு
October 14, 2025

கடந்த 2025.07.20 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் எழுநாவால் பிரசுரிக்கப்பட்ட க. பத்திநாதனின் ‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ நூல் வெளியீடு இடம்பெற்றது.  இலங்கை வேடர் பற்றி எழுதிய செலிக்மன் தம்பதி, கணநாத் ஒபேயசேகர, ஈழத்துப் பூராடனார் முதலான புலமையாளர் வரிசையில் இணைந்து கொண்டிருக்கிறார் நூலாசிரியர் க. பத்திநாதன். இத்துறையில் வேறெந்த முன்னோடி போலவுமில்லாமல், ‘அகத்தார்’ தரப்பில் எழுந்த முதற்குரல் என்பது […]

மேலும் பார்க்க

உத்தியாக்கள்: சில நினைவலைகள் 

7 நிமிட வாசிப்பு
October 3, 2025

உத்தி என்றால் கன்னட மொழியிலேயே ‘மேலே’ என்று அர்த்தம் என பேராசிரியர் ரகுபதி என்னிடம் ஒரு முறை கூறினார். 1980களில் இது நடந்தது. இன்றைக்கு 45 வருடங்களுக்கு முன்னர் என் ஆய்வைப் படித்தபின் அவர் இப்படிக் கூறியமை நினைவுக்கு வருகிறது. எனது கலாநிதிப்பட்ட ஆய்வில் இந்த உத்தியாக்களைப் பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன். மட்டக்களப்பின் கடற்கரையோரம் வாழ்கின்ற வேடர் சமூகம், இறந்தபின் உயிரோடு மேலே வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கும் தம் முன்னோர்களுக்குச் செய்யும் […]

மேலும் பார்க்க

‘எழுநா’வின் பதிப்புலகம்

7 நிமிட வாசிப்பு
September 25, 2025

ஜூலை 20, 2025, ‘எழுநா: 30 ஆவது வெளியீடு’ கலந்துரையாடலுக்கு நண்பர், எழுத்தாளர், இதழாளர் நடராஜா முரளீதரனின் அழைப்பின் பேரில் சென்று, கலந்து, பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ‘எழுநா’ யாழ்ப்பாணத்தில் கருக்கொண்டு ரொறோண்டோ, கனடாவில் பிரசவமாகும் ஒரு மாத இதழ். சஞ்சிகைக்கும் ஜேர்ணலுக்கும் இடையிலான தன்மையுடன் வெளிவருவதாக அதை நான் கருதுவதுண்டு. ஸ்காபரோவிலுள்ள கனடிய தமிழர் பேரவை மண்டபத்தில் (ஆம், அதே தான்!) சுமார் 4:00 மணிக்கு ஆரம்பமாகி சுமார் […]

மேலும் பார்க்க

க. பத்திநாதனின் உத்தியாக்கள் எனும் நூல் குறித்து

6 நிமிட வாசிப்பு
September 16, 2025

மட்டக்களப்பின் களுவன்கேணியைச் சேர்ந்த க. பத்திநாதன் எனும் ஆய்வாளன் எழுதியுள்ள பழங்குடிகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் ‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ எனும் பெயரில் ‘எழுநா’வினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் கிழக்கிலங்கையில் வாழும் வேடுவர்களின் கடந்தகால, நிகழ்காலப் பண்பாடுகளைக் கேட்டும், பார்த்தும், அறிந்த தகவல்களை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பாகக் காணப்படுகிறது. நவீன கல்வி, மிகப்பெரும்பாலும் அக்கல்வியைப் பெறுகின்ற மனிதரை அவர்கள் வாழும் சூழலுடன் ஒட்டி உறவாடவிடாமல் […]

மேலும் பார்க்க

மயூரநாதனின் யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு 1621 – 1948: கற்கைநெறி பேணிய ஒரு மாபெரும் படைப்பு

25 நிமிட வாசிப்பு
September 12, 2025

“தான் பிறந்த மண்ணின் மீது அபாரமான அபிமானமும், எடுத்துக்கொண்ட ஆய்வுப்பொருள் மீது ஆழ்ந்த புலமைத்துவமும் இல்லாவிடின் இப்படியானதொரு வியத்தகு படைப்பை உருவாக்கியிருக்க முடியாது.” கொழும்பு குமரன் புத்தக இல்லமும் எழுநா, ஆதிரை நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டுள்ள இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதனின் ‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு 1621 – 1948’ என்ற நூலை எனது நண்பர் விசாகன் மூலம் பார்வையிட நேர்ந்தது. ஒரு பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தனது மாணவர்களின் துணையோடு ஒரு […]

மேலும் பார்க்க

முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் ‘பதார்த்த சூடாமணி’  

15 நிமிட வாசிப்பு
September 4, 2025

பதார்த்தம் என்றால் உண்ணும் உணவு அல்லது அதில் பயன்படுத்தும் பொருள்கள். சூடாமணி என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. இங்கே தொகுக்கப்பட்ட நூல் என்று பொருள் கொள்ளலாம். கனடாவில் வசிக்கும் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்கள் எழுதிய ‘தமிழர் மருத்துவம் – ஒரு வரலாற்றுப் பார்வை’ நூலை மூன்று பகுதிகளாகச் சில மாதங்களுக்கு முன்பு பார்த்தோம். விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்து நாள்களைத் தள்ளிப் போட்டதில் சோம்பல் என்னை […]

மேலும் பார்க்க

இரசவர்க்கம்: தொடரும் சித்தமருத்துவப் பாரம்பரியம்

10 நிமிட வாசிப்பு
August 26, 2025

முனைவர் பால. சிவகடாட்சம் அவர்கள் எழுதிய ‘யாழ்ப்பாண மன்னன் செகராசசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ எனும் நூல் காலத்தின் தேவை ஆகும். யாழ்ப்பாண சிங்கை  ஆரியச்சக்கரவர்த்திகள் சிங்கைநகர் எனும் நல்லூர் பிரதேசத்தை 13 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் ஆட்சி செய்தனர். இவர்களில் பரராசசேகரன், செகராசசேகரன் என்பவர்கள் மன்னர்களாகவிருந்த போதிலும் சிறந்த மருத்துவர்களாகவும் விளங்கினர். இவர்கள் சிங்கை இராஜதானியை 12 வட்டங்களாகப் பிரித்து நிர்வாகத்தை நடாத்தி வந்தனர். அந்தவகையில் மருத்துவமனைகள், மருத்துவக் ‘கிளினுக்’குகள் […]

மேலும் பார்க்க