முல்லைத்தீவில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடப்பட்டது.
District Agriculture Training Center) - Mullaitivu Oddusuddan, Mullaitevu, Mullaitevu, Northern province, Sri Lankaவவுனியாவிலுள்ள அரசசார்பற்ற நிறுவனமான றகமாவின் ஒழுங்கமைப்பில், ஒட்டுசுட்டான் முல்லைத்தீவிலுள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில், மனிதக் கடத்தல் தொடர்பில் இடம்பெற்ற இளைஞர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கின்போது, எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்" என்ற தலைப்பிலான ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் இளைஞர்கள் பலர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. திரையிடலில் பங்குபற்றியிருந்த றகமா நிறுவனத்தினுடைய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஒருங்கிணைப்பாளரான கலாநிதி இந்திரமூர்த்தி சுதன் அவர்கள், “சுத்திகரிக்கப்பட்ட நீர் தொடர்பில் இருந்த […]