
புதிய அலை கலை வட்டம் – மகளிர் அணி (யாழ்ப்பாணம்) ஏற்பாட்டில், நவம்பர் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் நூல்கள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
புதிய அலை கலை வட்டம் – மகளிர் அணியின் தலைவர் சுடரி – சிவகௌரி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், எழுநா வெளியீடான “யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு” நூல் குறித்த தனது அனுபவத்தின் ஊடான கருத்துரையைப் பாவலர் உடுவிலூர் கலா வழங்கினார். அதனைத் தொடர்ந்து, இந்நூலின் ஆசிரியரான இ. மயூரநாதன் அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு தனது ஆய்வு நூல் குறித்துக் கருத்துப் பகிர்ந்தார்.
மேலும், “பசுமை எனும் பேரபாயம்”நூல் அறிமுகத்தை புதிய அலை கலை வட்டம் – மகளிர் அணியின் செயலாளர் ஸ்ரீமதி வழங்கினார். அந்நூலின் தற்காலத் தேவை குறித்தும், நூலாசிரியர் அவ்வாய்வை அணுகிய விதம் குறித்தும் அவர் சிறப்பாக எடுத்துரைத்தார்.
அத்துடன், நிகழ்வில் பங்குபற்றிய அனைவரும் தமது அனுபவத்தையும், எழுநா நூல்களின் தேவை குறித்தும் தமது கருத்துக்களை வழங்கினர். நிகழ்வின் ஒரு பகுதியாக எழுநா வெளியீட்டு நூல்களின் காட்சிப்படுத்தலும் இடம்பெற்றது.

