கவிதை வாசிப்பு நிகழ்வு - 'வாசலிலே கிருஷாந்தி' - பொற்பதி அறிவாலய மண்டபம், கொக்குவில்.
Loading Events

« All Events

  • This event has passed.

கவிதை வாசிப்பு நிகழ்வு – ‘வாசலிலே கிருஷாந்தி’ – பொற்பதி அறிவாலய மண்டபம், கொக்குவில்.

July 29 @ 5:00 pm - 6:00 pm

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான உரையரங்கு கடந்த புதன்கிழமை (29.07.2026) அன்று கொக்குவில் பொற்பதி அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்வுரையரங்கில் ‘அரசியல் தீர்வு – எதிர்நோக்கும் சவால்கள்’ ‘கறுப்பு ஜூலை – கற்க மறந்த பாடங்கள்’ மற்றும் ‘செம்மணிப் புதைகுழிகள் – உயிர்த்தெழும் சாட்சியங்கள்’ என்ற தலைப்புக்களில் உரைகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக எழுநாவின் கலைவட்டத்தின் வெளியீடாகிய ‘வாசலிலே கிருஷாந்தி’ கவிதைத்தொகுப்பிலுள்ள கவிதைகள் ச. சனோஜி, கோ. கம்சாயினி, சு. சுருதிகா , ஜீ. ரஜீவன் ஆகியோரால் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து கறுப்பு ஜூலையில் பலியானவர்களினதும், செம்மணிப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களினதும் நினைவாக மெழுகுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பொதுமக்கள், அரசியலபிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்

.

Details

Date:
July 29
Time:
5:00 pm - 6:00 pm

Organizer

Ezhuna
Phone
‪‪‪‪+94 77 797 5029
Email
contact@ezhunaonline.com
View Organizer Website

Venue

Potpathy Arivaalayam
Potpathy Road, Kokuvil East
Jaffna, Northern Province 40000 Sri Lanka
+ Google Map
View Venue Website