தெல்லிப்பளையிலுள்ள OfERR Ceylon நிறுவனத்தில் ‘நீர்த்த கடல்’ திரையிடல்.
OfERR Ceylon,Tellippalai Jaffna, Sri Lankaஎழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, தெல்லிப்பளையிலுள்ள 'OfERR Ceylon' நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் 25.04.2025 அன்று, முற்பகல் 10.00 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் தெல்லிப்பளையிலுள்ள OfERR Ceylon நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்த சிவராசா மரியறோசரி, “கடல் வளங்கள் தற்போது பல்வேறு செயற்பாடுகளால் அழிக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகின்றன. இதனால் சிறுதொழில் மீன்பிடித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. கடற்றொழில் அமைச்சர் இதனைக் கண்டுகொள்ள வேண்டும். முன்னைய […]