
எழுநாவின் வெளியீடாகிய, பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவர்களின் ‘வடக்குப் பிராந்திய காலநிலையியல்’ நூல் அறிமுக நிகழ்வு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அறிவோர் ஒன்று கூடலில் 2026.04.22 (புதன்கிழமை) அன்று தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு. அனந்த பாலகிட்ணர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கல்வி நிறுவகத்தின் புவியியல் பாட விரிவுரையாளராகிய திரு. க. அறிவழகன் அவர்களால் அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது.
திரு. அனந்த பாலகிட்ணர் தனது உரையில் இன்று காலநிலை பற்றிய விழிப்புணர்வின் அவசியம், யாழ் மக்களின் வாழ்வியலில் மரங்கள் பெறும் முக்கியத்துவம், யாழில் பழைய பூங்காவை அமைத்த கதை, வட பிராந்தியத்தில் நிகழ்ந்து வரும் காலநிலை மாற்றங்கள் போன்ற விடயங்கள் குறித்து அறியத் தந்தார்.
திரு. க. அறிவழகன், நூல் ஆசிரியரை அறிமுகம் செய்து இந்நூல் எழுதப்பட்ட நோக்கம், நூல் பேசும் விடயப் பரப்பு, அதன் சிறப்புகள், நூல் பற்றிய தனது கருத்துகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தலுடன் கூடிய உரையாடலாக வெளிப்படுத்தினார்.
மாணவர், கல்வியியலாளர், பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
