
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப்போராட்டத்தின் 1000 நாள் நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிகழ்வின் ஒரு அங்கமாக எழுநாவின் வெளியீடாகிய திரு. வை. ஜெயமுருகனின் ‘மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம்’ நூலின் அறிமுகம் சித்தாண்டி, கூடாரத்தில் 15.06.2026 ( திங்கட்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், நூலிற்கான அறிமுகவுரையினை திரு. சார்ள்ஸ் அன்ரனிதாஸ் அவர்கள் வழங்கியதுடன், நூல் ஆய்வுரையை திரு. க. குருநாதன் அவர்கள் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தை லூக், சட்டத்தரணி ஜெயசிங்கம், சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ். சிவயோகநாதன், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி அ. அமலநாயகி, பண்ணையாளர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
