
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் ஏற்பாடு செய்த ‘நூல்களின் சங்கமம்’ புத்தகக் கண்காட்சி, 2026 ஆகஸ்ட் 16ஆம் திகதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, ஸ்காபரோவில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்றத்தில் நடைபெற்றது.
இக் கண்காட்சியின் ஒரு அங்கமாகப் பல்வேறு எழுத்தாளர்களின் நூல் அறிமுகங்களும் நூல் வெளியீடுகளும் இடம்பெற்றன. அவற்றில் எழுநாவின் சஞ்சிகை அறிமுகமும் இடம்பெற்றது.
எழுநாவின் ஜூலை மாதச் சஞ்சிகையை மையப்படுத்தி, சஞ்சிகை தொடர்பான அறிமுக உரையினை திரு. வின்சன்ற் போல் சந்தியாப்பிள்ளை அவர்கள் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் பல்வேறு எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

