
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறைத் தலைவரும், எழுத்தாளருமான கலாநிதி தி. செல்வமனோகரன் எழுதிய ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’, ‘வாழ்க்கை வழக்காறுகள்’, ‘உதிர்ந்தொளிரும் சொற்கள்’ ஆகிய மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வு, 2026 நவம்பர் 18 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நூல்களில் ஒன்றான ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ நூல் எழுநா பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சிரேஷ்ட விரிவுரையாளரும், எழுத்தாளருமான இ. இராஜேஷ்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மூத்த எழுத்தாளர் சோ. பத்மநாதன் மங்கல விளக்கேற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில், எழுநா வெளியீடான ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ நூல் குறித்து ஆசிரியர் குகபரன் நவரத்தினம் உரையாற்றினார். கலாநிதி செல்வமனோகரனின் நாட்டார் தெய்வங்கள் குறித்த ஆய்வுப் பார்வை, இந்நூலின் சிறப்பம்சங்கள் மற்றும் அவர் விடயங்களை அணுகி எழுதிய விதம் குறித்த தனது கருத்துகளை அவர் விரிவாக முன்வைத்தார்.
இறுதியில் நூலாசிரியர் தி. செல்வமனோகரனின் ஏற்புரை மற்றும் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
இந்நிகழ்வையொட்டி, இதுவரை வெளிவந்த எழுநா வெளியீட்டு நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதன் மூலம் எழுநாவின் வெளியீட்டுப் பணிகள் குறித்தும் பார்வையாளர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
