நூல் வெளியீட்டு நிகழ்வும் கலந்துரையாடலும் - 'வளரும் வடக்கு' - சங்கிலியன் பூங்கா, யாழ்ப்பாணம்
Loading Events

« All Events

  • This event has passed.

நூல் வெளியீட்டு நிகழ்வும் கலந்துரையாடலும் – ‘வளரும் வடக்கு’ – சங்கிலியன் பூங்கா, யாழ்ப்பாணம்

September 5 @ 4:30 pm - 6:00 pm

யாழ்ப்பாண சர்வதேச புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் எழுநா வெளியீடாகிய ‘வளரும் வடக்கு’ நூல் வெளியீட்டு நிகழ்வும் கலந்துரையாடலும் 05.09.2026 (சனிக்கிழமை) அன்று மாலை 4.30 மணிக்கு சங்கிலியன் பூங்கா, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இதன்போது, வடக்கின் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்திசார் பரிமாணங்களை மையப்படுத்திய இந்நூலின் வெளியீட்டுடன், அதன் கருத்துகள், அனுபவங்கள் மற்றும் வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்த சிந்தனைகளைப் பகிரும் சிறப்பு உரையாடலும் இடம்பெற்றது.

மேலும் சிறகுகள் அமைய செயற்பாட்டாளர் ஜேமிகா பொன்னுத்துரையின் நெறியாள்கையின் கீழ், நூல் மதிப்புரைகளை யாழ்ப்பாண வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் தலைவர் திரு. குலசிங்கம் வசீகரன், தொழில்முனைவோர் திரு. சிவராஜா சிவரதன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

 

Details

Date:
September 5
Time:
4:30 pm - 6:00 pm

Organizer

Ezhuna
Phone
‪‪‪‪+94 77 797 5029
Email
contact@ezhunaonline.com
View Organizer Website

Venue

Sangiliyan Park,
AB20
Jaffna, Northern Province 40011 Sri Lanka
+ Google Map