
செம்புலம் மக்கள் கூடத்தின் ஏற்பாட்டில், எழுநா வெளியீடாகிய முனைவர் ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் ‘பசுமை எனும் பேரபாயம்’ நூல் அறிமுகமும் கலந்துரையாடலும், ஹட்டன், டிக்கோயா நகர சபையின் பிரதான மண்டபத்தில், 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.
செம்புலம் மக்கள் கூடத்தின் உறுப்பினர் சி. கிருஷ்ணபிரியன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நூல் அறிமுகவுரையை ஆய்வாளர் ச. மங்களதர்ஷினி அவர்களும், ஆய்வுரையை சட்டத்தரணி க. விஜயகுமார் அவர்களும் வழங்கியிருந்தனர்.
கலாநிதி எம். எஸ். இங்கர்சால் அவர்கள் கருத்துரையை வழங்கியதைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலுக்கான நெறியாள்கையை நிமிர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த நா. சபித்தா அவர்கள் மேற்கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஒஸ்லோ பல்கலைக்கழக இணைப்பேராசிரியரும் நூலாசிரியருமான முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் ஏற்புரையை வழங்கியிருந்தார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, தியேட்டர் மேட்ஸ் நாடகக் குழுவினரின் குறுநாடகமும் இடம்பெற்றது.
இறுதியாக, செம்புலம் மக்கள் கூடத்தின் தி. விண்ணோகாந் அவர்கள் நன்றியுரையை வழங்கியிருந்தார்.
நிகழ்ச்சித் தொகுப்பினை சமூகச் செயற்பாட்டாளர் ந. மங்கலவாணி அவர்களும் ஆசிரியர் சு. ரஜனி அவர்களும் வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் மாணவர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
