
எழுநா மற்றும் விம்பம் அமைப்புகளின் தொகுப்பில் வெளியான ‘இரு நூற்றாண்டு மலையகம் – வலியும் வாழ்வும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு 22.04.2026 (புதன்கிழமை) அன்று பிற்பகல் 2.15 மணிக்கு இராகலை, சில்வர்கண்டி தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இராகலை, சில்வர்கண்டி தமிழ் வித்தியாலய அதிபர் திரு. ச. பன்னீர்செல்வம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியரும் பேரவை உறுப்பினருமாகிய திரு. ச. மோகன்ராஜ் நூலறிமுகத்தினை வழங்கினார்.
மேலும், நூலாய்வுரையினை டலோஸ் தமிழ் மகாவித்தியாலய அதிபர் கவிஞர் திரு. மை. பா அவர்களும், கருத்துரையினை மலையக தேசிய கலை இலக்கிய பேரவையின் தலைவரும், மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வுபெற்ற பீடாதிபதியுமாகிய திரு. சிவ. இராஜதந்திரனும் வழங்கியிருந்தனர்.
மாணவர், பெற்றோர், செயற்பாட்டாளர், கல்வியியலாளர், பொதுமக்கள், ஊடகவியலாளர் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
