- பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ள சமஷ்டி அரசியல் முறைமைகளின் உதாரணங்கள் குறித்து பங்கேற்பாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
- மொழி, இன, பிராந்திய மற்றும் கலாசார வேறுபாடுகளைக் கொண்ட சமூகங்களில ;சமஷ்டி முறை எவ்வாறு பங்களிக்கக்கூடும் என்பது குறித்து ஆராயப்பட்டது.
- சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பில் சமஷ்டி முறையின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது.
- மத்திய அரசுக்கும் மாகாண அரசுகளுக்கும் இடையிலான உறவு மற்றும் அதிகார சமநிலை பற்றி கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
- இறுதியாக, புத்தகத்தின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் அரசியல் அமைப்பு மற்றும் எதிர்காலத்தில் அதிகாரப் பகிர்வின் முக்கியத்துவம் குறித்து பங்கேற்பாளர்கள் தங்களுடைய பார்வைகளைப் பகிர்ந்துகொண்டனர்.
நூலின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் அரசியல் அமைப்பு மற்றும் எதிர்காலத்தில் அதிகாரப் பகிர்வின் முக்கியத்துவம் குறித்து பங்கேற்பாளர்கள் தங்களுடைய பார்வைகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இலங்கையின் சூழலில் அதிகாரப் பகிர்வு தொடர்பான சவால்கள் மற்றும் சாத்தியங்கள் குறித்தும் பொதுவான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
‘அரசியல் பார்வை’ என்ற அமர்வுத் தலைப்பின் கீழ், ‘சமஷ்டி அரசியல்: ஓர் அறிமுகம்’ எனும் நூலை மையப்படுத்தி நடைபெற்ற இந்நிகழ்வு, தற்கால இளைஞர்களை வாசிப்பில் ஈடுபடுத்துவதுடன், சமூக மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பாகச் சிந்திக்கவும், கேள்விகளை எழுப்பவும், கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் ஒரு சிறந்த கற்றல் தளமாக அமைந்தது.
மேலும், சமஷ்டி அரசியல், அதிகாரப் பகிர்வு, கனடா மற்றும் இந்தியாவின் அரசியல் அணுகுமுறைகள், இலங்கையின் அரசியல் சூழல் போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
கேள்வி–பதில், கருத்துப் பரிமாற்றம் மற்றும் திறந்த கலந்துரையாடல்கள் மூலம் பங்கேற்பாளர்களின் அரசியல் அறிவும் விமர்சனச் சிந்தனையும் மேம்படுத்தப்பட்டதுடன், தொடர்ந்து வாசித்துக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் ஊக்குவிக்கப்பட்டது.
இதன் மூலம் “தீரம்” கற்கை வட்டத்தின் பிரதான நோக்கமான வாசிப்பு பண்பாட்டையும் அறிவார்ந்த சிந்தனையையும் இளைஞர்களிடையே வளர்ப்பதற்கான ஒரு பயனுள்ள முயற்சியாக இந்நிகழ்வு அமைந்தது.
தொடர்ந்தும் இளம் சமூகத்தினரிடையே அறிவு, வாசிப்பு மற்றும் சிந்தனையை வளர்க்கும் நோக்கில், பல்வேறு புத்தகங்களை அடிப்படையாகக் கொண்ட அமர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. புதிய புத்தகங்களும் பல்வேறு கருத்தியல் சார்ந்த நூல்களும் இவ்வமர்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படவுள்ளன.