மட்டக்களப்பின் களுவன்கேணியைச் சேர்ந்த க. பத்திநாதன் எனும் ஆய்வாளன் எழுதியுள்ள பழங்குடிகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் ‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ எனும் பெயரில் ‘எழுநா’வினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் கிழக்கிலங்கையில் வாழும் வேடுவர்களின் கடந்தகால, நிகழ்காலப் பண்பாடுகளைக் கேட்டும், பார்த்தும், அறிந்த தகவல்களை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பாகக் காணப்படுகிறது. நவீன கல்வி, மிகப்பெரும்பாலும் அக்கல்வியைப் பெறுகின்ற மனிதரை அவர்கள் வாழும் சூழலுடன் ஒட்டி உறவாடவிடாமல் […]
“தான் பிறந்த மண்ணின் மீது அபாரமான அபிமானமும், எடுத்துக்கொண்ட ஆய்வுப்பொருள் மீது ஆழ்ந்த புலமைத்துவமும் இல்லாவிடின் இப்படியானதொரு வியத்தகு படைப்பை உருவாக்கியிருக்க முடியாது.” கொழும்பு குமரன் புத்தக இல்லமும் எழுநா, ஆதிரை நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டுள்ள இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதனின் ‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு 1621 – 1948’ என்ற நூலை எனது நண்பர் விசாகன் மூலம் பார்வையிட நேர்ந்தது. ஒரு பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தனது மாணவர்களின் துணையோடு ஒரு […]
பதார்த்தம் என்றால் உண்ணும் உணவு அல்லது அதில் பயன்படுத்தும் பொருள்கள். சூடாமணி என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. இங்கே தொகுக்கப்பட்ட நூல் என்று பொருள் கொள்ளலாம். கனடாவில் வசிக்கும் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்கள் எழுதிய ‘தமிழர் மருத்துவம் – ஒரு வரலாற்றுப் பார்வை’ நூலை மூன்று பகுதிகளாகச் சில மாதங்களுக்கு முன்பு பார்த்தோம். விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்து நாள்களைத் தள்ளிப் போட்டதில் சோம்பல் என்னை […]
முனைவர் பால. சிவகடாட்சம் அவர்கள் எழுதிய ‘யாழ்ப்பாண மன்னன் செகராசசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ எனும் நூல் காலத்தின் தேவை ஆகும். யாழ்ப்பாண சிங்கை ஆரியச்சக்கரவர்த்திகள் சிங்கைநகர் எனும் நல்லூர் பிரதேசத்தை 13 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் ஆட்சி செய்தனர். இவர்களில் பரராசசேகரன், செகராசசேகரன் என்பவர்கள் மன்னர்களாகவிருந்த போதிலும் சிறந்த மருத்துவர்களாகவும் விளங்கினர். இவர்கள் சிங்கை இராஜதானியை 12 வட்டங்களாகப் பிரித்து நிர்வாகத்தை நடாத்தி வந்தனர். அந்தவகையில் மருத்துவமனைகள், மருத்துவக் ‘கிளினுக்’குகள் […]
எஸ். நயன கணேசன் கடல் சார்ந்து வாழ்கின்ற இச்சமூகம், இலங்கையினுடைய அரச கொள்கை வகுப்பாளர்களின் சீனாவுடனான ஒப்பந்தத்தினாலும், இந்தியக் கடல் அரசியலினாலும் இலங்கை அரசாங்கத்தோடு நின்று செயற்படுகின்ற தமிழ்த் தலைவர்கள், அமைச்சர்களுடைய செயற்பாடுகளினாலும், அவர்களைச் சார்ந்து நிற்கின்ற அரச அதிகாரிகள், கல்விமான்கள் தமிழ் ஊடகங்களின் செயற்பாடுகளினாலும் தங்களுக்கு எஞ்சியிருந்த கடல் வளத்தையும் இழக்கப்போகின்றோமே என்று ஏங்கித் தவிக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் (பக்கம்: 23). நீலப் பொருளாதாரம், கடல் விவசாயம் […]