Events from April 25 – April 18 – Ezhuna | எழுநா

தெல்லிப்பளையிலுள்ள OfERR Ceylon நிறுவனத்தில் ‘நீர்த்த கடல்’ திரையிடல்.

OfERR Ceylon,Tellippalai Jaffna

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, தெல்லிப்பளையிலுள்ள 'OfERR Ceylon' நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் 25.04.2025 அன்று, முற்பகல் 10.00 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் தெல்லிப்பளையிலுள்ள OfERR Ceylon நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்த சிவராசா மரியறோசரி, “கடல் வளங்கள் தற்போது பல்வேறு செயற்பாடுகளால் அழிக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகின்றன. இதனால் சிறுதொழில் மீன்பிடித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. கடற்றொழில் அமைச்சர் இதனைக் கண்டுகொள்ள வேண்டும். முன்னைய […]

நூல் வெளியீட்டு விழா – காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்

YMCA 109 Kandy Rd, Jaffna, Jaffna

எழுநாவின் பதிப்பில் மரியநாயகம் நியூட்டனால் எழுதப்பட்ட'காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்' எனும் தலைப்பிலான நூலானது 19.04.2025 அன்று, சனிக்கிழமை யாழ்ப்பாணத்தின் வாலிப கிறிஸ்தவ சங்கத்தில் (YMCA) வெளியிடப்பட்டது. கிராமிய உழைப்பாளர் சங்கம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இந்நூலானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீனவ சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய […]

‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’ தந்தை செல்வா கலையரங்கில் திரையிடல்

https://www.thanthaichelva.lk/ 114 Ragendra, பிரசாத் வீதி, Jaffna 40000, Jaffna

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட  'நீதிக்கான நீண்ட காத்திருப்பு'  என்ற தலைப்பிலான ஆவணப்படமானது  வல்லமை இயக்கத்தின் ஒழுங்கமைப்பில்  18.04.2025 அன்று, யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் திரையிடப்பட்டது.  இந்நிகழ்வில் வல்லமை இயக்கத்தின் பயணிகள் பலர் பங்குபற்றியிருந்தனர். ஆவணப்படத்தை பார்வையிட்ட பார்வையாளரான க.சத்தியசீலன்  என்பவர் “காணாமலாக்கப்பட்டவர்களது நீண்டகாலப் பிரச்சினையை சிந்திக்க இயலாதவாறு நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த நிலைமையில்,  இப்போராட்டத்தை இத்திரையிடலானது மீள நினைவுபடுத்தியுள்ளது. வந்திருக்கக்கூடிய புதிய அரசாங்கம்  […]