
கிருசாந்தி குமாரசாமி அவர்களின் 29ம் ஆண்டு நினைவேந்தலின் ஒரு அங்கமான எழுநாவின் தொகுப்பில் வெளிவந்த ‘வாசலிலே கிருசாந்தி’ செம்மணி தொடர்பான கவிதைகள் புத்தக வெளியீடும் கவிதை வாசிப்பு நிகழ்வும் 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை செம்மணி அணையா விளக்குத் திடலில் நடைபெற்றது.
இந்நூலானது 47 கவிஞர்களின் 54 கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது.
இந்நிகழ்வில் நூலின் முதல்பிரதிகளை கிருசாந்தியின் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து இந்நூலில் இடம்பெற்ற கவிதைகள் நிகழ்வில் கலந்து கொண்டோரால் வாசிக்கப்பட்டன.
புகைப்படம் : குமணன்
