
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் எழுநாவின் வெளியீடாகிய, திரு. க. பத்திநாதன் அவர்களின் ‘உத்தியாக்கள் – கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ நூலின் அறிமுக நிகழ்வு 03.01.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி விஜயலட்சுமி இராஜமனோகர் அவர்கள் நூல் அறிமுகவுரையினை வழங்கியிருந்தார்.
நூலாசிரியர் திரு. க. பத்திநாதன் அவர்கள் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டதுடன், நிகழ்வில் சிற்றுரையும் ஆற்றியிருந்தார்.
எழுத்தாளர்கள், வாசகர்கள், பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
