பசுமை எனும் பேரபாயம் - நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் - ஸாஹிறா ஆரம்பப் பாடசாலை, புத்தளம்.
Loading Events

« All Events

  • This event has passed.

பசுமை எனும் பேரபாயம் – நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – ஸாஹிறா ஆரம்பப் பாடசாலை, புத்தளம்.

March 7 @ 4:30 pm - 6:45 pm

எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் ‘பசுமை எனும் பேரபாயம்’ நூல் அறிமுகமும் கலந்துரையாடலும், ‘PILLARS’ அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் வீதி, புத்தளத்தில் அமைந்துள்ள ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையில், 07.03.2026 (சனிக்கிழமை) அன்று மாலை 4.30 மணி தொடக்கம் 6.45 மணி வரை இடம்பெற்றது.

Z.A. ஸன்ஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் Z.A.M. ரஸ்மி, நூலாசிரியர் அறிமுகத்தினை வழங்கியிருந்தார். நூல் விமர்சன உரைகளை கொழும்பு பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளரும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான அமைச்சின் இழப்பீட்டுக்கான அலுவலக ஆணையாளருமாகிய நஸீஹா ஹிஸ்மி அவர்களும், புத்தளம் மாவட்டச் செயலக புள்ளிவிபரக்கிளையின் மாவட்டப் பிரதிப்பணிப்பாளரகிய S. தனபாலசிங்கம் அவர்களும் வழங்கியிருந்தனர்.

PILLARS அமைப்பின் செயலாளர் ரினாஸ் முஹம்மத் அவர்கள் நன்றியுரையினை வழங்கியிருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பினை, இலங்கை தேசிய நீருயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நீர்வள வளர்ப்பு நிபுணர் A. அர்ஷத் அலி அவர்கள் வழங்கியிருந்தார்.

நூல் அறிமுகத்தினைத் தொடர்ந்து PILLARS அமைப்பின் இப்தார் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மதகுருமார்கள், சூழலியலாளர்கள், மாணவர்கள், சமூக சேவகர்கள் , பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Details

Date:
March 7
Time:
4:30 pm - 6:45 pm

Organizer

PILLARS
Phone
+94 77 748 4912
View Organizer Website

Venue

Zahira Primary Schoo
2RRH+9F4, Mannar Rd
Puttalam, 6130 Sri Lanka
+ Google Map
Phone
0322 265 473
View Venue Website