
மக்கள் கலை இலக்கியப் பேரவையின் ‘நூறு மலர்கள் மலரட்டும்’ புத்தக அரங்க விழாவில் எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் பசுமை எனும் பேரபாயம் நூலின் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் ஜனவரி 31 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. கலை இலக்கியப் பேரவையின் தலைவர் த. ஸ்ரீபிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு ஆசிரியர் க. தவசீலன் அவர்கள் அறிமுக உரையினை வழங்கியிருந்தார்.
வாசகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
