
எழுநாவினால் வெளியிடப்பட்ட கலாநிதி ஜேம்சன் அரசகேசரி அவர்களின் ‘வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ என்னும் நூலின் அறிமுக நிகழ்வானது, இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தில் (யாழ். பிராந்தியம்) 14.10.2025 அன்று, காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது.
நூல் பற்றிய அறிமுக உரையினை கலாநிதி ஜேம்சன் அரசகேசரி அவர்கள் வழங்கியிருந்தார். கடல் வளங்கள் தொடர்பான கற்கைநெறியினைப் பயலுகின்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இந்நூல் அறிமுக நிகழ்வு அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. யேசுதாஸ் அவர்கள் “உயர்கல்வியைத் தொடருகின்ற மாணவர்களுக்குத் தமிழ்மொழியில் உசாத்துணைக்காக இவ்வாறான ஆய்வு நூல்கள் வெளிவருவது அரிதானதொன்று, சமூகத்திற்கு, குறிப்பாக மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இவ் ஆய்வு நூல்களை எழுநா வெளியிடுவது பாராட்டப்பட வேண்டிய விடயம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
