'யாழ்ப்பாண மருத்துவ வரலாறு ' - நூல் வெளியீட்டு நிகழ்வு - யாழ். பொது நூலகம்
Loading Events

« All Events

  • This event has passed.

‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு ‘ – நூல் வெளியீட்டு நிகழ்வு – யாழ். பொது நூலகம்

November 1, 2025 @ 10:00 am - 1:30 pm

எழுநா வெளியீடாகிய, பா. துவாரகன் அவர்களின் ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்னும் நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 01.11.2025 (சனிக்கிழமை) அன்று யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர், திருமதி எழிலினி சித்தாந்தன் அவர்களால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை போதனா மருத்துவமனை அபிவிருத்தி உத்தியோகத்தர், திரு எஸ். சுதாகரன் வழங்க, தலைமையுரையினை யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளர் சபை உறுப்பினர், திரு இ. பேரின்பநாயகம் வழங்கியிருந்தார்.

நிகழ்வின் தொடர்ச்சியாக நூல் அறிமுக உரையினை மருத்துவ கலாநிதியும் யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளருமாகிய திரு த. சத்தியமூர்த்தி அவர்கள் வழங்க, சிறப்புரையினை அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான திரு ம. நிலாந்தன் அவர்கள் வழங்கியிருந்தார். தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. நூலை மருத்துவ கலாநிதி த. சத்தியமூர்த்தி வெளியிட்டு வைக்க, முதற்பிரதியை இலக்கியச் சோலை இ.து. குலசிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதிகளை ஊடகவியலாளர் த. பிரபாகரன், அலை ஆசிரியர் ஜேசுதாஸ், போதனா மருத்துவமனை கணக்காளர் காண்டீபன், கலைமுகம் ஆசிரியர் எமில் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நூல் மதிப்பீட்டுரையினை கோப்பாய் கல்வியற்கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் (ஓய்வுநிலை) முருகேசு கெளரிகாந்தன் அவர்கள் வழங்கியிருந்தார். மதிப்பீட்டுரையினைத் தொடர்ந்து ஏற்புரையினை நூலாசிரியர் பா. துவாரகன் அவர்கள் வழங்கியிருந்தார்.

நிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Details

Date:
November 1, 2025
Time:
10:00 am - 1:30 pm

Organizer

Ezhuna
Phone
‪‪‪‪+94 77 797 5029
Email
contact@ezhunaonline.com
View Organizer Website

Venue

Jaffna Public Library
Clock Tower Road, South
Jaffna, Northern 40000 Sri Lanka
+ Google Map
Phone
0212 226 028
View Venue Website