
எழுநாவினால் வெளியிடப்பட்ட, நடராஜா செல்வராஜா அவர்களின் ‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் – ஒரு வரலாற்றுத் தேடல்’ என்னும் நூல் பற்றிய கலந்துரையாடல் ஏழாலை மேற்கு சித்திவிநாயகர் சனசமூக நிலையத்தில் 31.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது.
சித்திவிநாயகர் நூல் நிலைய இயக்குனர் சபைத் தலைவர் கு.ரஜீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையினை ஆசிரியர் சி.ரமேஸ் அவர்கள் வழங்கியிருந்தார்.
நிகழ்வில் சனசமூக நிலைய உறுப்பினர்கள், மாணவர்கள் , பொதுமக்கள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
