
எழுநாவினால் வெளியிடப்பட்ட, சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா. சடகோபன் அவர்கள் எழுதிய ‘சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு’ நூலின் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் நல்லூர், சிவகுரு ஆதீனத்தில் 18.10.2025 (சனிக்கிழமை) அன்று, காலை 10.30 முதல் பிற்பகல் 1.00 வரை இடம்பெற்றது.
கோபாலகிருஷ்ணன் பிரவீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு, தவத்திரு வேலன் சுவாமிகள் அவர்கள் ஆசியுரையினை வழங்க, நூல் அறிமுக உரையினை சு.பிரவீன் அவர்கள் வழங்கியிருந்தார். மேலும், ‘யாழிலிருந்து மலையகம் வரை’ என்னும் தலைப்பில் குணகீதன் மதுராங்கி அவர்கள் தனது வாசிப்பு அனுபவத்தை வழங்கியிருந்தார். நிகழ்வின் தொடர்ச்சியாக ‘தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வில் மலையக மக்கள்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் இரா. சடகோபன் அவர்கள் சிறப்புரையாற்றியிருந்தார்.
இந்நிகழ்வில் சிறகுகள் அமைய உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

