compilations - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

வலியில் இருந்து வாழ்வு வரை : அரசியல், பொருளாதார, சமூக அபிவிருத்திக் கண்ணோட்டம் – பகுதி 1

28 நிமிட வாசிப்பு

மலையகம் இலங்கை தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. புவியின் சார்பாக சப்ரகமுவ குன்றுகளைத் தவிர்த்து கடல் மட்டத்திலிருந்து முன்னூறு மீட்டருக்கு மேல் அமைந்துள்ள பகுதி ‘மலையகம்’ என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சமூகஞ்சார் வரைவிலக்கணங்கள் படி இலங்கையின் மலையகம் இவ்வெல்லைக்கு அப்பாலுள்ள பகுதிகளையும் இணைத்துக் கொள்கிறது. அதனடிப்படையில் மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களும் மலையகத்தின் சமூகஞ்சார் வரைவிலக்கணத்தி்ல் உள்ளடங்குவதோடு சிலவேளைகளி்ல் கொழும்பு மற்றும் காலி மாவட்டங்களும் உள்ளடக்கப்படுகின்றன. அதற்கமைய […]

மேலும் பார்க்க

இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் : ஒரு காலக்கணக்கெடுப்பு – பகுதி 3

10 நிமிட வாசிப்பு

இனக்கலவரமும் இலக்கிய வெளிப்பாடும் மலையகத் தமிழர் வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் தொட்டு தொழிற்சங்க அடிப்படையிலும் இன, வர்க்க அடிப்படையிலும் பல்வேறுவிதமான எழுச்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இடம்பெற்று வந்துள்ளன. அவ்வாறு எழுச்சி பெறுகின்ற ஒவ்வொரு காலப்பகுதியிலும் அதற்கெதிராக அவர்களை ஒடுக்குவதற்கான நடைமுறைகளும் திட்டமிட்டு இடம்பெற்று வந்துள்ளன. இந்தியர் எதிர்ப்பு வாதம், இனவாதம் போன்ற கருத்து நிலைகள் இதில் முதன்மை வகித்தன. இவ்வாறு வளர்ந்து வந்த ஒடுக்குமுறைகள் எழுபதுகளில் தீவிர இனவாதமாக […]

மேலும் பார்க்க

இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் : ஒரு காலக்கணக்கெடுப்பு – பகுதி 2

16 நிமிட வாசிப்பு

கோ.ந. மீனாட்சியம்மாள் : மலையக இலக்கியத்தின் முதல் பெண் குரல்  நடேசய்யருடன் இணைந்து மலையகத் தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்த பெண் ஆளுமையாக கோ.ந. மீனாட்சியம்மாளைக் குறிப்பிடுகின்றனர். ‘ஈழத்தின் முதல் பெண் கவிஞர், பத்திரிகையாளர், அரசியல் செயற்பாட்டாளர் என்றெல்லாம் முதன்மைப்படுத்துகிறார் செ. யோகராசா (2007:43). முன்னோடி அரசியல் தொழிற்சங்க செயற்பாட்டாளரென குறிப்பிடுவதோடு பாரதியை மலையகத்தில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடி என்று எழுதுகிறார் லெனின் மதிவானம் (2012:34). நடேசய்யருக்கு சமாந்தரமாகவும் அவருக்குப் பின்னரும் […]

மேலும் பார்க்க

இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் : ஒரு காலக்கணக்கெடுப்பு – பகுதி 1

10 நிமிட வாசிப்பு

மலையக தமிழரின் வருகை தொடர்பான கால முரண்கள்  தெற்காசியாவின் மிக முக்கியமான தேசிய இனங்களில் ஒன்றாக விளங்கும் ‘மலையக சமூகம்’ இருநூறு வருட வரலாற்றைக் கொண்ட ஒரு இனமாகும். காலனித்துவ பொருளாதார முறைமையின் காரணமாக சமூக அசைவுக்குட்படுத்தப்பட்ட ஒரு இனக்குழுமமாக மலையக சமூகத்தை நாம் வரையறை செய்யலாம். இன்று இருநூறு வருட வரலாற்றை தொடும் மலையகத் தமிழ்ச் சமூகமானது இன்னும் தமக்கென சரியானதொரு இலக்கிய வரலாற்று எழுதியலை உருவாக்கிக்கொள்ள முடியாத […]

மேலும் பார்க்க

புராதனகால யாழ்ப்பாணத்தில் பௌத்தமும் தமிழும் – பகுதி 3

17 நிமிட வாசிப்பு

பௌத்த சிற்பங்கள் இலங்கையில் உன்னதமான வேலைப்பாடுகளான பௌத்த சிற்பங்கள் பெருந்தொகையிலே காணப்படுகின்றன. ஆதியில் தர்மச்சக்கரம், புத்தர்பாதம், போதிமரம் என்பனவே வழிபாட்டுச் சின்னங்களாக விளங்கின. ஆயினும் கிரேக்கரின் செல்வாக்கினால் உருவ வழிபாடு இந்திய சமயங்களிடையில் வழமையாகிவிட்டது. இலங்கையில் இரண்டாம் நூற்றாண்டளவில் புத்தர் படிமங்களை வழிபடுவது வழமையாகிவிட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள புத்தர் படிமங்கள் கிபி. 300-500 வரையான காலப்பகுதிக்குரியனவாகத் தெரிகின்றன. கந்தரோடை, சுண்ணாகம், வல்லிபுரம், நவக்கீரி ஆகியவிடங்களிற் புத்தர் படிமங்கள் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துப் பௌத்த சமயந் […]

மேலும் பார்க்க

புராதனகால யாழ்ப்பாணத்தில் பௌத்தமும் தமிழும் – பகுதி 2

16 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணக் குடாநாட்டினை நாகதீப என்று மகாவம்சம் முதலான பாளி நூல்கள் குறிப்பிடுகின்றன. அதனை நாகநாடு என்று மணிமேகலையிற் குறிப்பிட்டுள்ளனர். நாகர் செறிந்து வாழ்ந்தமையின் காரணமாக அப்பெயர் உருவாகியுள்ளது. மட்டக்களப்பு பூர்வசரித்திரம் நாகதீவு என்னும் பெயரால் யாழ்ப்பாணத்தைக் குறிப்பிடுகின்றது. நாகதீபத்தில் ஆதிக்கம் பெற்றிருந்த நாக அரசர்களைப் பற்றிய கதை மகாவம்சத்திற் சொல்லப்படுகின்றது. நாகதீவின் அருகிலே கடலில் அமைந்துள்ள தீவொன்றில் காணப்பட்டதும் அதிசயங்களின் நிலைக்களம் ஆகியதுமான பௌத்த பீடமொன்றினைக் கைவசப்படுத்தும் நோக்கத்துடன் மகோதரன், […]

மேலும் பார்க்க

புராதனகால யாழ்ப்பாணத்தில் பௌத்தமும் தமிழும் – பகுதி 1

19 நிமிட வாசிப்பு

அறிமுகம் இலங்கையில் கிமு. பத்தாம் நூற்றாண்டு முதலாகப் பரவிய பெருங்கற்காலப் பண்பாடு நாகரோடு தொடர்புடையது. அந்தப் பண்பாட்டினை நாகர் பரப்பினார்கள் என்பதையும் அவர்கள் தமிழ் மொழி பேசியவர்கள் என்பதையும் அப்பண்பாட்டு மக்களின் ஈமத் தலங்கள் சிலவற்றிலுள்ள ஈமக் கல்லறைகளின் கல்வெட்டுகளினால் அறிய முடிகின்றது. எழுத்தின் பயன்பாடு அறிமுகமாகியதும் நாகர் ஈமக் கல்லறைகளிலே சொற்களையும் இரு வசனங்களையும் ஒரு கிரயாபூர்வமான முறையிலே பதிவுசெய்தனர். அவை நாகரைப் பற்றியவை. தமிழ் மொழியில் எழுதப்பட்டவை. தமிழ்ப் […]

மேலும் பார்க்க

இலங்கையில் தமிழ் பௌத்தர் – பகுதி 3

22 நிமிட வாசிப்பு

சிங்கள மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தமிழ்நாட்டில் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சி இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்பட முடியும். இரு நாடுகளுக்கும் இடையில் இந்து சமய உறவுகள் இருந்ததற்கான ஆதாரமாக இலங்கை வடமாகாணத்தில் அமைந்துள்ள திருக்கேதீசுவரம் பற்றிய பக்தி பாடல் ஒன்றும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில்  அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் கோயிலைப் பற்றிய பக்தி பாடல் ஒன்றும் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டுள்ளமையை கூறலாம். மேலும் சைவ மத பிரச்சாரகராக விளங்கிய சுந்தரர் கிபி. […]

மேலும் பார்க்க

ஈழமும் தமிழகமும் : பௌத்த சமயத் தொடர்புகள் – பகுதி 2

13 நிமிட வாசிப்பு

தமிழகத்துப் பௌத்தப் பள்ளிகளும் உரையாசிரியர்களும் பாளி மொழியில் அமைந்த பௌத்த இலக்கியங்களுக்கு உரை எழுதியவர்களில் புத்ததத்தர், புத்தகோஷர் என்போர் மேதாவிலாசமானவர்கள். அவர்களில் மூத்தவரான புத்ததத்தர் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த விகாரங்களில் வாழ்ந்தவர். அவர் இளமைக் காலத்திலே மகாவிகாரையிலே தங்கியிருந்து துறவியாக ஞானஸ்தானம் பெற்றவர். வடஇந்தியாவிலே பிறந்த புத்தகோஷர் காஞ்சிபுரம், காவிப்பூம் பட்டினம், அநுராதபுரம் ஆகியவற்றிலுள்ள விகாரங்களிலே தங்கியிருந்து திரிபிடகத்தின் ஏடுகளை ஆய்வு செய்தவர். அவர்கள் இருவரும் எழுதிய நூல்கள் தேரவாதம் நிலைபெறும் […]

மேலும் பார்க்க

இலங்கையில் தமிழ் பௌத்தர் – பகுதி 2

23 நிமிட வாசிப்பு

சிங்கள மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன இலங்கைத் தமிழர்களுக்கு பௌத்தம் ஏன் அந்நியமாகிப் போனது? தமிழ் பௌத்தம் இலங்கையில் ஏன் அழிந்தது? இந்த கேள்விகளுக்கான பதில்கள் தமிழர் ஒருவரிடம் இருந்து தான் வர வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு தமிழரை எம்மால் காணமுடியவில்லை. அதனால் அந்த தமிழ் மனிதனைப் பற்றிய விவரங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் புத்த பாரம்பரியம் குறித்த சர்வதேச கல்வி மாநாடு 1992 […]

மேலும் பார்க்க