கோ.ந. மீனாட்சியம்மாள் : மலையக இலக்கியத்தின் முதல் பெண் குரல் நடேசய்யருடன் இணைந்து மலையகத் தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்த பெண் ஆளுமையாக கோ.ந. மீனாட்சியம்மாளைக் குறிப்பிடுகின்றனர். ‘ஈழத்தின் முதல் பெண் கவிஞர், பத்திரிகையாளர், அரசியல் செயற்பாட்டாளர் என்றெல்லாம் முதன்மைப்படுத்துகிறார் செ. யோகராசா (2007:43). முன்னோடி அரசியல் தொழிற்சங்க செயற்பாட்டாளரென குறிப்பிடுவதோடு பாரதியை மலையகத்தில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடி என்று எழுதுகிறார் லெனின் மதிவானம் (2012:34). நடேசய்யருக்கு சமாந்தரமாகவும் அவருக்குப் பின்னரும் […]