தமிழகத்தில் வழங்கும் சமயங்களினைப் புறத்தே இருந்து வந்த சமயங்கள், அகத்தே நிலவிய சமயங்கள் எனும் இரு பிரிவுகளில் அடக்கலாம். சமணம், பௌத்தம் முதலானவை சங்ககால தமிழ்ச் சமூகவியலில் புறத்தேயிருந்து வந்த பெருஞ் சமயங்களாகும். ஆசிவகம் தமிழகத்திலிருந்தே நாவலத்தீவு முழுதிற்கும் பரவிற்று என்று ஒரு சாரரும், வடகோடியிலிருந்தே தமிழகம் போந்ததென்று ஒருசாரரும் குறிப்பிடுவர். புறச்சமயங்கள் தமிழ்த் தாயகங்களுக்கு எவ்வகையில், எவ்விடத்தின் வழிநுழைந்தன என்பனவற்றினைக் குறித்து ஆய்ந்து அறிந்து கொள்ளுவதற்கு, அச் சமயங்களின் […]