'யாழ்ப்பாண மருத்துவ வரலாறு' - நூல் அறிமுக நிகழ்வு - கொழும்புத் தமிழ்ச்சங்கம்
Loading Events

« All Events

  • This event has passed.

‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ – நூல் அறிமுக நிகழ்வு – கொழும்புத் தமிழ்ச்சங்கம்

July 1 @ 5:30 pm - 6:30 pm

எழுநா வெளியீடாகிய பாலசுப்பிரமணியம் துவாரகன் அவர்களின் ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ நூல் அறிமுகம் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அறிவோர் ஒன்றுகூடலில் 01.07.2026 புதன்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றது.

வைத்தியக் கலாநிதி சி. அனுஷ்யந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மருத்துவர் மஹிமா சுரேஸ் அவர்கள் அறிமுகவுரையை ஆற்றியிருந்தார்.

மருத்துவர் மஹிமா சுரோஷ் உரையாற்றுகையில் மன்னன் சிங்கை செகராசசேகரன் காலப்பகுதியில் சித்தமருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் போன்றன எவ்வாறு வியாபித்திருந்தன என்பது பற்றி குறிப்பிட்டதோடு, நூலில் கூறப்பட்டிருந்த ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கையில் நடந்த மேலைத்தேய மருத்துவ வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை காட்சிப்படுத்தலோடு விபரித்திருந்தார்.

மேலும் நூல் பற்றிய விடயங்களை தமிழ்ச்சங்க உறுப்பினரும் ஓய்வுபெற்ற பிரதி அதிபருமாகிய திரு. த. இராஜரட்ணம் அவர்கள் வழங்கியிருந்தார்.

கொழும்பு தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Details

Date:
July 1
Time:
5:30 pm - 6:30 pm

Venue

Colombo tamil sangam
07 57th Ln Wellawatta
Colombo, Western 00600 Sri Lanka
+ Google Map
Phone
0112 363 759
View Venue Website