
நிமிர் விடுதலை இயக்கத்தினால் ‘காணி உரிமைகளும் மலையகப் பெண்களும்’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வில் எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் ‘பசுமை எனும் பேரபாயம்’ நூல் அறிமுக நிகழ்வு இரத்தோட்டை பிரதேச சபை மண்டபத்தில் 08.03.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் R. மதுசிகா அவர்களினால் ‘பசுமை எனும் பேரபாயம்’ நூலை முன்வைத்து ‘மலையகத்தில் சூழல் கரிசனையற்ற திட்டங்கள் பற்றிய மறுவிசாரணை’ என்ற தலைப்பில் உரை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச மக்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
