இருத்தலின் மீது கவியும் இன்மைகள் - நூல் வெளியீட்டு நிகழ்வு - திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம்
Loading Events

« All Events

  • This event has passed.

இருத்தலின் மீது கவியும் இன்மைகள் – நூல் வெளியீட்டு நிகழ்வு – திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம்

February 28 @ 10:00 am - 11:00 am

எழுநாவின் வெளியீடாகிய, இளங்கோவின் ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு, 28.02.2026 (சனிக்கிழமை) அன்று, காலை 10.00 மணிக்கு – 238, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது மணி மண்டபம் – திருமறைக்கலாமன்றத்தில் இடம்பெற்றது.

திரு. இ. கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு. கி. செல்மர் எமில் வரவேற்புரை வழங்க, திரு. டெ. க. அரவிந்தறாஜ் மற்றும் திரு. சி. ரமேஸ் ஆகியோர் மதிப்பீட்டுரைகளை வழங்கினர்.
நிகழ்வின் தொடர்ச்சியாக, நூலினை திரு. வடகோவை வரதராஜன் அவர்கள் வெளியிட்டு வைக்க, திரு. சோ. பத்மநாதன் மற்றும் திரு. அ. யேசுராசா ஆகியோர் கெளரவப்பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வினை ஒழுங்குபடுத்தியவர்களுக்கும், பேச்சாளர்களுக்கும், நூலாசிரியர் இளங்கோ சார்பில் வடகோவை வரதராஜனால் நினைவுப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. பொதுமக்கள், வாசகர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Details

Date:
February 28
Time:
10:00 am - 11:00 am

Organizer

Ezhuna
Phone
‪‪‪‪+94 77 797 5029
Email
contact@ezhunaonline.com
View Organizer Website

Venue

Thirumarai Kalamanram
238 Main Street, A9
Jaffna, 4000 Sri Lanka
+ Google Map
Phone
0212 222 393
View Venue Website