
எழுநா மற்றும் விம்பம் அமைப்புகளின் தொகுப்பில் வெளியான ‘இரு நூற்றாண்டு மலையகம் – வலியும் வாழ்வும்’ நூலின் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும், அரங்கத் தோழர்கள் பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், டிசம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பொகவந்தலாவ க்றீன் லைன் மண்டபத்தில் இடம்பெற்றது.
நூல் பற்றிய அறிமுக உரையினை ஆசிரியரும் கவிஞரும் விமர்சகருமாகிய பெ. சசிக்கலா அவர்கள் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் அண்மையில் இலங்கையைத் தாக்கிய இயற்கை அனர்த்தத்தினால் உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அரங்கத் தோழர்கள் பண்பாட்டுக்கழகத்தின் ஆற்றுகை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
