
எழுநாவினால் வெளியிடப்பட்ட நடராஜா செல்வராஜா அவர்களின் ‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் – ஒரு வரலாற்றுத்தேடல்’ என்னும் நூல் பற்றிய கலந்துரையாடல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் (விநோதன் மண்டபம்) அறிவோர் ஒன்று கூடலில் 2025.10.29 (புதன்கிழமை) அன்று மாலை 5.00 மணிக்கு இடம்பெற்றது.
கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகர் ஜெயதேவன் சித்தார்த்தினி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையினை எழுத்தாளர் எஸ்.ரகுநாத் அவர்கள் வழங்கியிருந்தார்.
நிகழ்வில் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
