



உணவு உற்பத்தியை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பில் கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளரான கலாநிதி எஸ்.ஜே அரசகேசரி உணவு நெருக்கடிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் உணவு உற்பத்தியின் எல்லையை நாங்கள் இப்போது அடைந்திருக்கின்றோம் என்பதுதான் உண்மை. உள்ளூரில் உள்ள உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணம் அறுவடைக்குப் பிந்திய இழப்பு அதிகரித்துள்ளது. அதைவிட உள்ளூர் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொழுது உள்ளூரில் உணவு உற்பத்தி […]
சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் 1992இல் ஆரம்பிக்கப்பட்டது. மூலிகைத் தாவரங்கள் தொடர்பில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் வளங்களை சரிவர பயன்படுத்த முடியாதுள்ளது. காரைநகரிலுள்ள கடுக்காய் பற்றி அந்தப் பிரதேச மக்கள் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. தற்போது நாங்கள் அது தொடர்பில் விழிப்பூட்டி அங்கிருந்து மருந்துக்கு தேவையான கடுக்காயைப் பெற்றுவருகின்றோம். நிதிப் பிரச்சினையால் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிரமமாகவுள்ளது. மூலிகை மருந்து உற்பத்திகளை அதிகரிப்பதன் ஊடாக பலருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் […]
எங்களுடைய உற்பத்திகள் எல்லாம் பருவகால உற்பத்திகள். பனங்காயை அன்றைய தினமே பயன்படுத்த வேண்டும். ஆனால் எம்மிடமுள்ள வளங்களைக் கொண்டு குறித்தளவு பனங்களியே எடுக்க முடியும். எமது உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பு தாராளமாக உள்ளது. சந்தைக்கு பொருள்களை வழங்குவது தான் சிக்கல். மூலப்பொருள்களை முடிவுப்பொருளாக மாற்றுவதற்குரிய பொறித்தொகுதி இல்லை. பொருத்தமான பொறித்தொகுதியை அடையாளம் காண்பது சவாலாக உள்ளது.
1/2 கிலோ சத்துமாவுடன் தொடங்கினேன். தற்போது மாதம் 300கிலோ சத்துமாவுக்கும் அதிகமாக விநியோகிக்கின்றேன். எமது கிராமத்தையும் கடந்து வெளி மாவட்டங்களுக்கும் சத்துமாவை விநியோகிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். வெளியிலிருந்து வரும் உற்பத்திகளோடு போட்டி போடும் போது எமக்கு சவால்கள் அதிகமாயுள்ளன
ஜசுபி உற்பத்திகள் இயற்கையில் கிடைக்கும் பழங்களைக்கொண்டு செய்யப்படுகின்றன. எமது உற்பத்திக்கான பழங்களை அயலிலுள்ள 150க்கும் மேற்பட்ட விவசாயிகளிலிருந்து பெற்றுக்கொள்கின்றோம். தென்பகுதி மக்கள் இங்கு வரும்போது நெல்லிரசங்களை எம்மிடம் அதிகம் பெற்றுக்கொள்கின்றார்கள்
இது எங்களுடைய பரம்பரைத் தொழில். நான்காவது தலைமுறையாக நான் செய்கின்றேன். நானும் எனது கணவரும் இணைந்து இதனை ஆரம்பித்தோம் தற்போது ஐந்து பேர் இதில் முழுநேரமாக பணிபுரிகின்றனர். களிமண் கொண்டுவருவதில் இருக்கும் சிக்கல்களால் இந்தத் தொழிலை பலர் கைவிட்டுள்ளனர்.
சிறுதொழில் முயற்சியாக 12பேர் இணைந்து வானவில் பற்றிக் உற்பத்தியை ஆரம்பித்தோம். தற்போது படிப்படியாக முன்னேறி ஒரு உற்பத்தி நிலையமாக வளர்ச்சியடைந்துள்ளோம். சில சில இடையூறுகள் உள்ளன. இறக்குமதித் தடை வந்தபோது இயங்குவதற்கு பெரிதும் சிரமப்பட்டோம்.
நாங்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டீரியல்ஸை இறக்கி இங்க இருந்து ஒரு பொருளை செய்வதை விட இங்க தேவையான வளம் இருக்கு. அந்த வளத்தை பயன்படுத்தி முடிவுப்பொருளை சர்வதேசத்தில் சந்தைப்படுத்த வேண்டும் என்டுதான் இதை தொடங்கியிருக்கிறம். அந்த அளவுக்கு நாங்கள் என்னும் வளரவில்லை. உற்பத்தியாளர் எண்ணிக்கை கூடினாத் தான் அதை செய்ய முடியும். உள்ளூர் மக்கள் இதை வாங்குவது குறைவு. அவர்கள் இதை ஆடம்பரப் பொருளாகத்தான் பாக்குறாங்க. இப்ப நாட்டில இருக்குற பொருளாதாரப் […]
நான் ஒரு துறையில் இருப்பதில்லை. ஐந்து வருடத்துக்கு ஒருக்கா நான் தொழிலை மாற்றிக் கொள்வேன். எல்லா கலைகளிலும் நான் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளேன். நான் பழகும் அனைத்து மனிதர்கள், உயிரினங்கள் அவற்றிடம் இருந்துதான் நான் எனக்கு தேவையான படைப்பாக்கத்திற்கான தகவல்களை பெற்றுக் கொள்கிறேன். என்னுடைய மனதில் என்ன தோன்றுகின்றதோ அதை அப்படியே படைப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் நான் உதவியாள்களை கூடுதலாக வைப்பது […]
ரஞ்சி உற்பத்தி நிலையத்தை 2010இலிருந்து நடத்தி வருகின்றேன். தற்போது சத்துமா, ஒடியல் மா, வல்லாரை மா உட்பட 35 விதமான உற்பத்திகளை செய்து வருகின்றோம். அவற்றில் சத்து மாவுக்கே அதிக கேள்வியுள்ளது. கொரோனா தொற்று மற்றும் தொடர்ந்து வந்த பொருளாதார நெருக்கடியால் உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. உள்ளூர் உற்பத்திப் பொருள்களுக்கு போதுமான கேள்வி இருந்தாலும், மூலப்பொருள்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கலால் போதுமான உற்பத்திகளைச் செய்ய முடிவதில்லை.
உள்ளூர் உற்பத்தி முயற்சிகளின் 3ஆவது காணொலித் தொடரில் நல்லெண்ணெய் உற்பத்தியாளர் க.தர்மேஸ்வரன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். நான்காவது தலைமுறையாக இந்த தொழிலைச் செய்து வருகின்றோம். எங்களுடைய உற்பத்திக்கான எள்ளை வடமத்திய மாகாணத்திலிருந்து தான் கூடுதலாகப் பெற்றுக்கொள்கின்றோம். யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் எள் எங்களுடைய உற்பத்திக்கு போதுமானதாக இல்லை. மரச்செக்கில் ஆட்டி எடுத்த நல்லெண்ணெய்க்கே கேள்வி அதிகமாக உள்ளது. அதனால் மரச் செக்கையே தற்போதும் பயன்படுத்துகின்றோம். மரச்செக்கில் எண்ணெயின் தன்மை மாறாது. எண்ணெய் […]
குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு ஏன் பிணை அவசியம், பிணை தொடர்பில் மக்கள் மத்தியிலுள்ள இரட்டை நிலைப்பாடுகள், எவ்வாறான சந்தர்ப்பங்களில் பிணை மறுக்கப்படலாம், இலங்கையில் குற்றவியல் வழக்குகளிலுள்ள பலவீனங்கள் போன்ற பல விடயங்களை சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் இந்தக் காணொலியில் விளக்கியுள்ளார்.
காணி மோசடிகள் தொடர்பிலும் அதை தவிர்ப்பதற்கு காணி வாங்கக்கூடிய ஒரு நபர் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் இந்தக் காணொலியில் விளக்கியுள்ளார்.
இலத்தீன் அமெரிக்க நாடான சிலியில் அண்மையில் நடைபெற்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பங்கோடல் தொடர்பாகவும் அது இலங்கையினுடைய இனப்பிரச்சினை சார்ந்தது அரசியலமைப்பு சீர்திருத்தம் சார்ந்தும் என்ன படிப்பினைகளை வழங்குகின்றது என்பது தொடர்பாக சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் இந்தக் காணொலியில் விளக்கியுள்ளார்.
ஜனாதிபதியொருவர் தனது பதவிக் காலம் நிறைவடையும் முன்னர் பதவியிலிருந்து விலகினால் அதைத் தொடர்ந்து இடம்பெறும் அரசியலமைப்புச் செயன்முறை என்ன என்பது தொடர்பில் இந்தக் காணொலியில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் விளக்கியுள்ளார்.
அமெரிக்காவின் ஹமில்டன் ரிசர்வ் வங்கியானது தாங்கள் முதலீடு செய்த 257.5 மில்லியன் டொலர் மற்றும் முதலீட்டுக்கான வட்டியை செலுத்துமாறு கோரி இலங்கை மீது நியூயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு இலங்கை மீது தொடரப்படுவதற்கான காரணம் மற்றும் இந்த வழக்கு இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் ஏற்படுத்தவுள்ள தாக்கம் தொடர்பில் இந்தக் காணொலியில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் விளக்கியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பை எவ்வாறு வகைப்படுத்துவது என்பது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. ஆரம்பத்திலே அது ஒரு பலமான ஒற்றையாட்சி சார்புள்ள ஒரு கூட்டாட்சி என்றவாறாக தான் அந்தப் பார்வை இருந்தது. காரணம் இந்திய உபகண்டத்தின் பிரிவினையின் தாக்கம் கூடுதலாக அரசியலமைப்பு உருவாக்கத்தில் இருந்தது. 1990 களுக்குப் பின்னர் இந்திய அரசியல் மிக அடிப்படையில் ஒரு பிராந்திய அரசியலை நோக்கிய நகர்வானது இந்திய அரசியலமைப்பையும் அடிப்படையில் மாற்றி புரட்டிப் போட்டு […]
ஜூன் 2ஆம் திகதி ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு பயணிகளை ஏற்றி வந்த எரோப்ளொட் (Aeroflot Airbus A330-300) ரஷ்ய விமானம் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் (Colombo Commercial High Court) கட்டாணை (enjoining order) பிறப்பிக்கப்பட்டதுக்கு அமைய நாட்டை விட்டுச் செல்ல தடை பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவை அயர்லாந்தை தலைமையகமாகக் கொண்ட செலஸ்ரியல் அவியேசன் (Celestial Aviation) என்ற நிறுவனம் ரஷ்ய அரச விமான சேவையை வழங்கும் எரோப்ளொட்டுக்கு […]
சமகாலத்தில் பேசுபொருளாக உள்ள விடயங்களின் சட்டத்தின் தொழிற்பாடு குறித்த அவதானங்கள் ‘சட்டம் அறி’ என்ற காணொலி தொடரின் ஊடாக வெளிவர உள்ளன. இத்தொடரை சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் வழங்குகின்றார். மேலும் பார்வையாளர்களிடம் இருந்து எழக்கூடிய சட்டம் தொடர்பான தெரிந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கும் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக விளக்கமளிப்பார்.
மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் அல்லது அரச ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாடுகளில் உத்வேகத்தோடு மக்களை இணைத்துக்கொண்டு போராடுவதில் பல சவால்கள் உள்ளன. ஆண்களின் மேலாதிக்க அரசியல், பொருளாதார சிந்தனை சரியான, முழுமையான சிவில் சமூக செயற்பாட்டிற்கு பொருத்தமானதாக இல்லை. மட்டக்களப்பில் இருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடம் இரு கருத்தியல்கள் உள்ளன.
சிவில் சமூக செயற்பாடுகள் பலவீனமடைந்து செல்லும் நிலையையே காணமுடிகின்றது. அரசியல் கட்சிகள் சிவில் சமூக அமைப்புகளை ஒருபொருட்டாக கருதுவதில்லை. கட்சிகளுக்குள்ளும் கூட்டு முடிவு இல்லை. இந்த ஆண்டு இரு கதவடைப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த போராட்டங்களால் அன்றாடம் உழைக்கும் தொழிலாளர்களின் நலன்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளன. மாறாக அரசியல் விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. குறிப்பிட்ட சில சிவில் சமூக அமைப்புகள் மட்டும் தான் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்கின்றன, உரையாடுகின்றன, […]
ஒற்றுமையாக இருந்த வடக்கு கடற்றொழில் சமூகத்தை கடற்றொழில் அமைச்சர் பிளவுபடுத்தி வைத்துள்ளார். சீனாவிலிருந்து மீன் இறக்குமதி செய்வதால் வடமராட்சி கிழக்கில் சூடையின் விலை 30ரூபா, கும்பிளாவின் விலை 150 ரூபா. 250 ரூபாவுக்கு மண்ணெண்ணெய் தந்துவிட்டு 150 ரூபாவுக்கு மீனை எடுத்தால் எப்படி கடற்றொழில் சமூகம் உழைத்து வாழ்வது? கடலட்டை பண்ணை சாதகமானதா பாதகமானதா என்பது தொடர்பில் ஆய்வுசெய்து தருமாறு யாழ்.பல்கலைக்கழக கடற்றொழில் பீடத்திடம் நாம் ஒரு சிவில் சமூகமாக […]
சிவில் சமூக அமைப்புக்களை, அரசியல் விழிப்புணர்வுடன் செயற்படுவோரை அச்சுறுத்தலாக பார்க்கும் பார்வை தமிழ்த்தேசிய கட்சிகளிடம் காணப்பட்டது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் எதிர்வினையாற்றுகின்றோமே தவிர எமக்கான ஒரு தெளிவான திசையையும் பயணத்தையும் கொண்டிருக்கவில்லை. நாங்கள் விரும்புகின்ற திசையிலே எமது இலக்கை தெளிவாக வரையறுத்துக்கொண்டு அதனை நோக்கி நகரும் போதே இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும்.
சிவில் சமூக செற்பாட்டில் ஈடுபடுவதற்கு நேரம் போதாமை என்பதற்கு அப்பால் சலிப்புத் தன்மையை நான் அவதானித்துள்ளேன். ஊடகங்கள் அரசியல் பிரமுகர்களுக்கும் நன்றாக பழகியவர்களுக்குமே முன்னுரிமை அளிக்கின்றன. ஊடகங்கள் அரசியல்வாதிகளால் சிவில் சமூக அமைப்புகளின் போராட்டங்கள் திசைதிருப்பப்படுகின்றன. சிவில் சமூக வலைமைப்புகள் இன்றும் ஆண்களை மையப்படுத்தியனவாகவே உள்ளன. அரசியலில் ஈடுபடும் பெண்கள் சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும்போது அரசிய கட்சிகளின் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.
தமிழ் சமூகத்தில் சிவில் சமூக அமைப்புகளின் தேவைப்பாடுகள் பற்றிய தன்னுடைய கருத்துக்களைக் பகிர்கின்றார் அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.
தமிழ் சமூகத்தில் சிவில் சமூக அமைப்புக்களைக் கட்டமைப்பதன் தேவை தொடர்பில் சமூக பொருளாதார ஆய்வாளரும், ஆலோசகருமான செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை. இயல்பாகவே சிவில் சமூகம் என்பது மக்கள் சார்ந்த நலன்களுக்காக தான் பேசுகின்றது. குடிசார் சமூகங்கள் ஏதோ ஒரு வகையில் அரசியல் கட்சி மயப்படுத்தப்பட்டுப்போகும்போது அவை சிவில் சமூகம் என்ற அந்தஸ்திலிருந்து வெளியே போகின்றன. ஒரு மனிதன் பொது சேவை உத்தியோகத்தராக சேர்ந்து அரசாங்க உத்தியோகத்தராக போனால் அவனது அரசியல் […]